நடராஜன் சுப்பிரமணியம்
நடராஜன் சுப்ரமணியம் (ஆங்கிலம்:Natarajan Subramaniam) நட்டி அல்லது நட்ராஜ் என அறியப்படுபவர், இவர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
என். நடராஜன் சுப்ரமணியம் | |
---|---|
பிறப்பு | நடராஜன் சுப்ரமணியம் பரமக்குடி தமிழ் நாடு ![]() |
பணி | ஒளிப்பதிவாளர் நடிகர் தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2001 – தற்சமயம் |
வரலாறு
நடராஜன் சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை நட்ராஜ் என்னும் பெயர் கொண்டு அறியப்படுகிறார். இவர் தமிழ் நாடு, இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார்.[1] மேலும் இவர் பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி, ஆகிய இந்தி திரைப்படத்திலும் மற்றும் யூத் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் சக்கரவியூகம், மிளகா, மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெற்றி சூடிய மிளகா திரைப்படம் இந்தியில் மறுஆக்கம் செய்யப்படுகிறது, இதில் தமிழில் நாயகனாக நடித்த நட்ராஜே, இந்தியில் ஒளிப்பதிவு செய்கிறார்.[2]
திரைப்பட வரலாறு
ஒளிப்பதிவாளராக
- லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி (Last Train to Mahakali) (1999)
- யூத் (தமிழ்) (1999)
- பாஞ்ச் (2003)
- பிளாக் ஃப்ரைடே(Black Friday) (2004)
- பரினீத்தா (2005)
- ஏக்லவ்யா (2007)
- ஜப் வீ மெட் (இந்தி) (2007)
- ஃபிர் கபி (2008)
- ஹல்லா போல் (2008)
- கோல்மால் ரிட்டர்ன்ஸ் (இந்தி) (2008)
- லவ் ஆஜ் கல் (இந்தி) (2009)
- லஃபான்கே பரின்டே (2010)
- நாக் அவுட் (2010)
- தேசி பாய்ஸ் (2011)
- ரான்ஜானா (2012)
- ஜில்லா (தமிழ்/மலையாளம்) (2013)
நடிகராக
- நாளை (தமிழ்) (2006)
- சக்கர வியூகம் (தமிழ்) (2008)
- மிளகா (தமிழ்) (2010)
- குலசேகரனும் கூலிப்படையும் (தமிழ்) (2010)
- முத்துக்கு முத்தாக (தமிழ்) (2011)
- சதுரங்க வேட்டை (தமிழ்) (2014)
ஆதாரம்
- "I love the action masala films: Natrajan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் மார்ச் 8, 2013.
- "இந்தியில் ரீமேக் ஆகும் மிளகா". தினமணி. பார்த்த நாள் மார்ச் 8, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.