மின்கடத்தி

மின்கடத்தி (Conductor) அல்லது கடத்தி என்பது மின்னோட்டத்தை இலகுவாக அனுமதிக்கும் பொருள் ஆகும். அனேக உலோகங்கள் நல்ல கடத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி, செப்பு, பொன், அலுமினியம், இரும்பு, இரசம் ஆகிய உலோகங்கள் கடத்திகள் ஆகும். மின்கம்பிகளும் கடத்திகளால் ஆனவையே.

பொருட்களின் கடத்தல் தன்மையை அல்லது மின்கடத்து திறனை ஓம் விதி விபரிக்கின்றது. ஓம் விதி ஒரு கடத்தியின் மின்னோட்டத்திற்கும் பிரயோகிக்கப்படும் மின்புலத்திற்கும் நேர் விகித தொடர்பு உண்டு என்கின்றது. அந்நேர் விகித தொடர்பை சமனாக்கும் காரணியே மின்கடத்து திறன் எனப்படும்.

கணித விபரிப்பு

மின்னோட்டம் (j), மின்புலம் (E), கடத்துதிறன் (σ) ஆகியவற்றுக்கான தொடர்பை பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:

j = σ E

தலைகீழாக தடுதிறனை (ρ) பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:

j = E / ρ

எளிய உலோகங்களின் கடத்து திறனை பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:

,

τ - தணிவுறு காலம் - Relaxation time
n - சுயாதீன இலத்திரன்களின் அடர்த்தி - density of conduction electrons
e - இலத்திரன் மின்னணு அளவு - electron charge
m - இலத்திரன் மெதுகை - electron mass

நுட்பியல் சொற்கள்

  • உலோகம் - Metal
  • ஓம் விதி - Ohm Law
  • நேர் விகித தொடர்பு - Directly Proportional Relationship
  • மின்கடத்து திறன் - Electrical Conductivity
  • மின்தடு திறன் - Electrical Resistivity
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.