அலைநடத்தி
அலைநடத்தி ( Waveguide ) என்பது மின்காந்த அலைகள் , ஒலி அலைகள் போன்ற அலைகளை நடத்தும் ஒரு வடிவம் ஆகும் . ஒவ்வொரு வகையான அலைகளுக்கும் பலவகையான அலைநடத்திகள் உள்ளன .

மின்காந்தவியல் |
---|
![]() |
|
|
|
|
இணைமாறுகை யாத்தல் Electromagnetic tensor
(stress–energy tensor)
|
அலைனடத்திகளின் வடிவவியல் மாறுபடும் . ஏனென்றால் பலகையில் உள்ளது போல் ஒரு பரிமாணங்களிலும் , இழைகள் அல்லது குழாய்களில் போல் இரு பரிமாணங்களிலும் இருக்கும் . இதனோடு , பல்வேறு அலைனடத்திகள் பல்வேறு அதிர்வெண்களை நடுத்துவதாக இருக்க வேண்டும் .
இயற்கையாகவே அலைனடத்திகளுக்கு வடிவங்கள் உண்டு . சான்றாக , ஆழ்கடலின் மேற்புறத்தில் உள்ள நீரானது வேல் மீன்கள் இசைப்பதினை வெகு தூரத்திற்கு கடத்த வழிநடத்தும் பண்பைக் கூறலாம் .
அலைகள் அலைனடத்தி சுவரினால் முற்றிலும் எதிர்க்க படுவதால் தொடர்ந்து அந்த சுவரில் முட்டி முட்டி அலைனடுத்தியின் எல்லையிலேயே பயணிக்கிறது .
நியமம்
அலைகள் , கோள அலைகளைப் போல் திறந்த வெளியில் அனைத்து திசைகளிலும் பயணிக்கும் . இதன்வழியில் , அவைகள் தனது ஆற்றலை நீளத்தின் சதுக்கத்துக்கு இழக்கிறது . அதாவது R நீளத்தை கடக்கும் பொழுது அதன் ஆற்றலை மூல ஆற்றலில் இருந்து R2 இல் வகுப்பதாக கணிக்கப்படுகின்றது .அலைனடத்தி அலைகளை ஒரு பரிமாணங்களில் வழிநடத்தவும் , அதன் எல்லைக்கும் இருக்கவும் உதவுவதால் , அங்கே ஆற்றலை இழப்பது இல்லை . இதனால் தான் அலைகள் வெகு தூரங்கள் தன் ஆற்றலை இழக்காமல் பயணிக்க முடிகிறது .
மின்காந்த அலைனடத்தி
மின்காந்த நிழற்பட்டையின் விரிந்த பகுதியான அலைகளை எடுத்துச் செல்ல அலைக்கடத்தியானது உருவாக்கப் படுகிறது . ஆனால் இது குறிப்பாக ஒலியலை அதிர்வெண்ணிலும் , மைக்ரோ அலைகளிலும் பயன்படுகிறது . அதிர்வெண்களை பொருத்து , அவை உருவாக்கப் படும் மூலப்பொருளான கடத்து பொருளா ? இல்லை இருமுனைகடத்து பொருளா ? என்று தீர்மானிக்கப்படும் .
ஒளி அலைனடத்தி
ஒளியதிர்வெண்ணில் பயன்படுத்தும் அலைனடத்திகள் குறிப்பாக இருமுனை மின்கடத்திகள் ஆகும் .
ஒலி அலைனடத்தி
ஒலி அலைகளை நடத்தும் ஒலி அலைனடத்திகள் இயல்பானவை . ஒலி நடத்தும் நாளம் ஒரு கடத்தும் பட்டையாக செயல்படுகிறது .