மிகுவெல் உலோபசு டி லெகாசுபி

மிகுவெல் லோபெசு டெ லெகாசுபி (Miguel López de Legazpi [1] (c. 1502 – ஆகத்து 20, 1572), பாசுக்கு கடல்காண் பயணியும் கிழக்கிந்தியத் தீவுகளில் முதல் எசுப்பானியக் குடியிருப்பை நிறுவியவரும் ஆவார். இவர் எல் அடெலான்டடொ என்றும் எல் வீயோ (மூத்தவர்) என்றும் அறியப்படுகின்றார். புதிய எசுப்பானியாவிலிருந்து (தற்கால மெக்சிக்கோ) அமைதிப் பெருங்கடலைக் கடந்து வந்த லெகாசுபி 1565இல் பிலிப்பீன்சில் செபு நகரத்தை நிறுவினார். பிலிப்பீன்சும் குவாம், மரியானா தீவுகள் போன்ற மற்ற அமைதிப் பெருங்கடல் தீவுக்கூட்டங்களும் அடங்கிய எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். பல்வேறு உள்நாட்டு அரசுகளுடனும் அரசர்களுடனும் அமைதி உடன்பாடு கண்டு மிகுவல் லோபெசு டெ லெகாசுபி உருவாக்கிய எசுப்பானியக் கிழக்கிந்தியாவிற்குத் தலைநகராக மணிலாவை 1571 இல் நிறுவினார்.[1] பிலிப்பீன்சின் அல்பே மாநிலத்தின் தலைநகரமான லெகாசுபி நகரம் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மிகுவல் லோபெசு டெ லெகாசுபி
Miguel López de Legazpi
எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் தலைமை ஆளுநர்
பதவியில்
ஏப்ரல் 27, 1565  ஆகத்து 20, 1572
அரசர் பிலிப்பு II
பின்வந்தவர் குயிடொ டெ லாவெசரிசு
தனிநபர் தகவல்
பிறப்பு மிகுவல் லொபெசு டெ லெகாசுபி
c. 1502
சுமார்ராகா, கிபுசுகோவா, காசுத்தீல் இராச்சியம்
இறப்பு ஆகத்து 20, 1572 (அகவை 6970)
மணிலா, எசுப்பானியக் கிழக்கிந்தியா
அடக்க இடம் சான் அகஸ்தீன் தேவாலயம், மணிலா]]

மேற்சான்றுகள்

  1. KARNOW, Stanley. "Miguel López de Legazpi". In Our Image: America's Empire in the Philippines. Random House (1989). ISBN 978-0-394-54975-0.– On Miguel Lopez de Legazpi vs Manuel de Legazpi: Stanley Karnow erroneously used the name "Manuel de Legazpi" to refer to Miguel Lopez de Legazpi at the Cast of Principal Characters, The Spanish section of his book on page 446, however the Index and the entirety of the book solely used the name "Miguel Lopez de Legazpi"; Karnow also mistakenly used the year "1871" (as the founding year of Manila as a capital) at the Cast of Principal Characters, The Spanish section, but the rest of the book used "1571", specifically on pages 43–47, 49, and 485

வெளியிணைப்புகள்

அரசு பதவிகள்
புதிய அலுவலகம் பிலிப்பீன்சின் தலைமை ஆளுநர்
1565—1572
பின்னர்
குயிடொ டி லாவெசரிசு
கௌரவப் பட்டங்கள்
முன்னர்
பெத்ரோ மெனென்டெசு டி அவிலெசு
எல் அடெலண்டடொ
1571—1572
கலைக்கப்பட்டது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.