மத்தூர்

மத்தூர் கிருட்டிணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராகவும் உள்ளது. இந்த ஒன்றியம் 24 ஊராட்சிகளை உள்ளடக்கியது.

மாத்தூருடன் குழப்பிக் கொள்ளாதீர்
மத்தூர்
பட்றஅள்ளி
ஊராட்சி ஒன்றியம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
  ஆட்சி மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635203
அருகிலுள்ள நகரங்கள்ஊத்தங்கரை, தர்மபுரி, வாணியம்பாடி

கோட்டை

இங்கு ஒரு கோட்டை இருந்தது. இது இயற்கை அரண் இல்லாத தரைக்கோட்டையாகும். தற்போது கோட்டை அழிக்கப்பட்டு ஊராக உள்ளது. கோட்டை அகழி இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. அப்பகுதியில் கோட்டை தெரு என்ற பெயர் இன்றும் வழக்கத்தில் உள்ளது. கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.[1]

சிவன் கோவில்

மத்தூரில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் காணப்படுகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரிலுள்ள ஆற்றங்கரையோரம் சோமேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் ஒரு சிவாலயம் பழமையான கோவிலாக கருதப்படுகின்றது. இந்த கோவிலில் பெரும் பகுதி சிதலமடைந்து காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சார்ந்த சிவனடியார்கள் முயற்சியால் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இக்கோயில் மூலவரான சோமேஸ்வரர் லிங்க வடிவம் கோவிலுக்கு வெளியே நந்திக்கு வெகு அருகிலேயே உள்ளது. லிங்கம் மட்டுமே உள்ளது. ஆவுடையார் இல்லை.

நடுகல்

மத்தூர் பகுதியில் பழங்காலம் தொன்று தொட்டே நடுகல் வழிபாடு முறைகள் காணப்படுகின்றது. மத்தூரிலிருந்து சிவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் மூன்று இடங்களில் கல்வீடு அமைப்பு கொண்ட பத்து நடுக்கற்கள் காணப்படுகின்றன. இந்த பத்து நடுக்கல்லில் இரண்டு நடுக்கல் உடைந்து காணப்படுகிறது. ஒரு நடுக்கல் உடைந்தும், மற்றுமொன்று மேல்பகுதி இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மத்தூர் பகுதியே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சுமார் ஒன்பது நடுக்கல் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 306
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.