மதுராந்தகத் தேவர் (கதைமாந்தர்)
மதுராந்தகத் தேவர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கண்டராதித்தர் செம்பியன் மாதேவி மகனாவார். வரலாற்றில் இடம்பெற்ற உத்தம சோழனை சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
மதுராந்தகத் தேவர் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
![]() மதுராந்தகத் தேவர் | |
உருவாக்கியவர் | கல்கி |
வரைந்தவர்(கள்) | மணியம், வினு, மணியம் செல்வன் |
தகவல் | |
தொழில் | சோழ இளவரசர் |
குடும்பம் | சுந்தர சோழன், செம்பியன் மாதேவி |
மதம் | சைவம் |
தேசிய இனம் | சோழ நாடு |
கதாப்பாத்திரத்தின் இயல்பு
மதுராந்தகத் தேவரின் பெற்றோர் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியாரும் பெரும் சிவபக்தர்கள். எனவே மதுராந்தகத் தேவரும் ஏறக்குறைய இருபது பிராயம் வரையில் சிவபக்தராக, அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தார்.
பழுவூர் இளையராணி நந்தினியைச் சந்தித்துப் பேசிய பின்னே சிவபக்தியைத் துறந்து, சோழநாடு தனக்குரியது என்று எண்ணத் தொடங்கினார். பழுவேட்டரையர்கள் முதலிய சிற்றரசர்களின் ஆதரவினைப் பெற ரகசிய கூட்டங்களைக் கூட்டினார். இதனை அறிந்த செம்பியன் மாதேவி மதுராந்தகத் தேவரை பழையாறைக்கு அழைத்தார். சுந்தர சோழரின் மறைவுக்குப் பிறகு அவரின் புதல்வர்கள் ஆதித்த கரிகாலனும், அருள்மொழிவர்மனும் சோழ அரசினை ஆள்வார்கள் என்று கண்டராதித்தர் வாக்குத் தந்திருமையைச் செம்பியன் மாதேவி எடுத்துரைத்தார். எனினும் மதுராந்தகத் தேவரின் ஆசையில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாகத் தனது ஆசைக்குக் தடையாக இருக்கும் அன்னையிடம் கோபமும் வெறுப்பும் வளர்ந்தது. [1]
அதனால் செம்பியன் மாதேவி மதுராந்தகன் மந்தாகினியின் மகனென்ற உண்மையை கூறி, தன்னுடைய மகனாக சேந்தன் அமுதனை காண செல்கிறார். அங்கே சிறிது தாமதமாக வருவதாக கூறிய மதுராந்தகன், கருத்திருமனுடன் சேர்ந்து இலங்கையிலிருக்கும் பாண்டிய மகுடத்தினை அடையவும், தானே அடுத்த பாண்டியனாக முடிசூட்டிக் கொள்ளவும் ஆசைப்படுகிறான். அவ்வாறு போகும் வழியில், கந்தன்மாறன் வந்து வந்தியத்தேவன் என்று தவறாக நினைத்து வேல் எறிந்து விடுகிறான். அதிலிருந்து தப்பிய மதுராந்தகன், தன்னுடைய மாமனாரான சின்ன பழுவேட்டரையரை எதிர்த்து வீர மரணம் அடையும் படி செய்கிறான். [2]