நந்தினி (கதைமாந்தர்)

நந்தினி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துகொண்ட பழுவூர் இளையராணி ஆவார்.

நந்தினி
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
நந்தினி தேவி ஓவியம்: பத்ம வாசன்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
பெற்றோர் வீரபாண்டியன் மந்தாகினி
சகோதரன்(கள்) மதுராந்தகத்தேவன், திருமலை
தகவல்
பிற பெயர்பழுவூர் இளையராணி
பால்வரலாற்று கதைமாந்தர்
தொழில்வீரபாண்டியனை கொன்றமைக்காக சோழ வம்சத்தினை பழி தீர்த்தல்
குடும்பம்திருமலை

வீரபாண்டியன்

மந்தாகினி
துணைவர்(கள்) பெரிய பழுவேட்டரையர்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு
தோழர்(கள்)/தோழி(கள்) மணிமேகலை
கதாப்பாத்திரத்தின் தன்மை
இயல்பு சோழ இனத்தின் மீது பழியுணர்ச்சி
திறன்(கள்) மோகம் கொள்ள வைக்கும் அழகு, வசப்படுத்தும் பேச்சுத்திறன், சாதூரிய திட்டமிடுதல்

கதாப்பாத்திரத்தின் இயல்பு

நந்தினி வீரபாண்டியனை கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார். சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்கிறாள். சுந்தர சோழரின் வாரிசுகளான குந்தவை தேவியையும், அருள்மொழிவர்மனையும், ஆதித்த கரிகாலனையும் தனித்தனியே கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்படுகிறாள்.

மதுராந்தகனுக்கு ஆசையூட்டுதல்

கண்டராதித்தரின் மகனான மதுராந்தத் தேவன், சிவ கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அரச பதவிகளில் நாட்டம் இன்றி இருந்தவரை நந்தினி சந்தித்து மன்னராகும் தகுதி மதுராந்தகனுக்கே உண்டு என்று மனம் மாற்றம் செய்கிறாள். அதனால் மதுராந்தகன் சிவ பக்தியை துறந்து நாடாள வேண்டி சிற்றரசர்களின் ரகசிய கூட்டத்தினைக் கூட்டுகிறான். அதில் மதுராந்தகன் கலந்து கொள்ள ஏதுவாக தன்னுடைய பல்லக்கினை தருகிறாள் நந்தினி.

சகோதரன்

நந்தினி தேவியின் அண்ணன் திருமலை. பழுவூர் சிற்றரசரான பெரிய பழுவேட்டரையரை நந்தினி திருமணம் செய்ததை திருமலை விரும்பவில்லை. அதன் பின் அவளை சந்திக்கவும் திருமலை பல நேரங்களில் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார். சோழப் பேரரசின் முதல் மந்தியான அநிருத்தப் பிரம்மராயரின் முதன்மை ஒற்றனாக திருமலை வேலை செய்கிறார்.

ஆதித்த கரிகாலன் கொலை

வீரபாண்டியனின் கொலைக்காக ஆதித்த கரிகாலனை பழி வாங்குவதற்காக கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனை வரவைக்கின்றாள். அங்கே மணிமேகலைக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் திருமணம் செய்துவைக்கவே அழைத்திருப்பதாக ஏமாற்றுகிறாள். வேட்டை மண்டபத்திற்கு ஆதித்த கரிகாலனை அழைத்து வந்து கொலை செய்கிறாள். அதற்கு முன் மணிமேகலையையும், வந்தியத்தேவனை அங்கே ஒளிந்துகொள்ளும்படி செய்கிறாள். பெரிய பழுவேட்டரையர் ஆதித்தகரிகாலனை கொல்லப் போகின்றார்கள் என்பதை அறிந்து தடுக்க முற்பட்டு மயக்கமிட்டு விழுகிறார். அவரை பாண்டிய ஆபத்துதவிகளை தூக்கிவர செய்து மூன்று நாட்கள் உணவளித்து மயக்கமாக இருந்தவரை தெளிவித்து அவரிடமிருந்து விடைபெற்று மறைந்துவிடுகிறாள்.

நூல்கள்

நந்தினியைக் கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.