மச்சிலிப்பட்டணம்
மச்சிலிப்பட்டணம் (Machilipatnam, தெலுங்கு: మచిలీపట్నం,
మచిలీపట్నం மச்சிலிப்பட்டணம் | |
— நகரம் — | |
அமைவிடம் | 16°10′N 81°08′E |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிருஷ்ணா |
ஆளுநர் | ஈ. சீ. இ. நரசிம்மன்[1] |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு[2] |
MP[3] | கொனகல்ல நாராயணா |
மக்கள் தொகை |
183 (2001) • 6,875/km2 (17,806/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
26.67 கிமீ2 (10 சதுர மைல்) • 14 மீட்டர்கள் (46 ft) |
குறியீடுகள்
|
முதன் முதலில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியினர், 1611ஆம் ஆண்டில் இங்கு வணிகம் செய்ய தொழிற்கூடங்களை அமைத்தனர்.
வரலாறு

தொலெமியின் கூற்றுப்படி இந்த நகரம் கி.மு 3வது நூற்றாண்டு (சாதவாகனர் காலம்) முதலே மைசோலோசு என்ற பெயரில் இருந்துள்ளது. கி.மு முதல் நூற்றாண்டுக்கால எரித்ரியன் கடல்வழி பெரிபிளசு என்னும் கடல்வழி பயண ஆவணத்தில் மசலியா என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] இந்தியாவின் தென்கிழக்கில் கோரமண்டல் கரையில் கிருஷ்ணா ஆறு வங்காள விரிகுடாவில் சேருமிடத்தில் அமைந்துள்ள இந்தத் துறைமுக நகரம் அக்காலத்திலிருந்தே கடல் வாணிகத்திற்கு புகழ் பெற்றிருந்தது. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தனது முதல் தொழிற்சாலையை இங்கேயே அமைத்தது. பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு, பிரித்தானிய, டச்சு வணிகத்திற்கு முக்கியமான மையமாக விளங்கியது.
பொருளாதாரம்
மீன் வணிகம் சிறப்புற விளங்கும் இந்தத் துறைமுகத்தில் 350 மீன்பிடி படகுகள் இருக்கலாம். இங்கு தரைவிரிப்பு நெய்யும் தொழில் முனைப்பாக உள்ளது. இங்கு விற்கப்படும் பிற பொருள்களாக அரிசி, எண்ணெய் வித்துக்கள், அறிவியல் உபகரணங்கள் உள்ளன. தொடர்வண்டி முனையமும் கல்வி நிலையங்களும் உள்ளன. 1923 முதலே ஆந்திரா வங்கிக்கு இங்கு கிளை உள்ளது.
வங்காள விரிகுடாப் பகுதியில் அடிக்கடி நேரும் சூறாவளிகளால் ஏற்படும் கடல் சீற்றத்தால் இந்தப் பகுதி பாதிப்படைந்து வந்துள்ளது. 2004 ஆழிப்பேரலையின்போது மச்சிலிப்பட்டணமும் சுற்றுப்புற மீனவச் சிற்றூர்களும் பெரிதும் பாதிப்படைந்தன. அரசும் அரசல்லா தன்னார்வல அமைப்புக்களும் மீள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- மச்சிலிப்பட்டணம் தகவல்கள்
- ஆந்திர அரசின் கிருஷ்ணா மாவட்டம் குறித்த தகவல் கோப்பு
- ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை
- மாங்கினபுடி கடற்கரை பற்றி ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை
- கிருஷ்ணா மாவட்ட வரலாறு
- சென்னைஆன்லைன்.கொம்– கலம்காரி– தொன்மையான கண்கவர் கைவினை
- "கலம்காரி" - ஆர்.எல். செப்
- கலம்காரி கலை – கையச்சு துணிகளின் தற்கால பார்வை
- மச்சிலிப்பட்டணத்தின் வானிலை – எம்எஸ்என்.கொமிலிருந்து