பொதக்குடி

பொதக்குடி (Podakkudi) தமிழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே கூத்தாநல்லூர் எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது.

பொதக்குடி
பொதக்குடி
இருப்பிடம்: பொதக்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°44′25″N 79°30′43″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் நீடாமங்கலம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்ற தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2 சதுர கிலோமீட்டர்கள் (0.77 sq mi)

இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, அந்நூருல் முஹம்மதிய்யு எனும் பெயரில் அரபிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு இசுலாமிய (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.

கல்வி நிறுவனங்கள்

அரசு கல்வி கலாசாலைகள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (நூரியாஹ் தெரு, பொதக்குடி)
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (முஹம்மது அலீ தெரு, அகர பொதக்குடி)
  • அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி (காந்தி தெரு, பொதக்குடி)
  • அரசு இருபாலர் மழலையர் பள்ளி (பிரதான சாலை, பொதக்குடி)
  • அரசு இருபாலர் தொடக்கப் பள்ளி (முஹம்மது அலீ தெரு, அகர பொதக்குடி)

தனியார் கல்வி நிறுவனங்கள்

  • எ.என்.எ. மெட்ரிகுலேஷன் பள்ளி (காயிதே மில்லத் தெரு, அகர பொதக்குடி)
  • இந்தோ-பிரிட்டீஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி (பிரதான சாலை, பொதக்குடி)
  • நவபாரத் மழலையர் பள்ளி (ஹாஜியார் தெரு, பொதக்குடி)
  • வி.ஆர்.என். மயிலாம்பாள் நினைவு மழலையர் பள்ளி (ஷௌகத் அலீ தெரு, பொதக்குடி)

கடந்தகால நிகழ்வுகள் ஓர் பார்வை

புதுமனைவாழ் பொதுமக்களின் வசதிக்காக, மா பங்கு கமிட்டியின் செலவில் முஹம்மதியாஹ் தெருவிற்கும், ஷௌகத் அலீ தெருவிற்குமிடையே புதியதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் பெயரிட்டு 30.09.2010 திறந்து வைக்கப்பட்டது.

இவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல் இயங்கத்துவங்கியது.

பொதக்குடி அரசு மருத்துவமனை 31.12.1967 ஞாயிற்றுக்கிழமை தமிழக சுகாதார அமைச்சர் S.J. ஸாதிக் பாட்ஷாவால் திறந்து வைக்கப்பட்டது.

பொதக்குடி உயர்நிலைப்பள்ளி 14.7.1962 சனிக்கிழமை மாநில கல்வி மற்றும் நிதி அமைச்சர் எம். பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வூரின் அரபுக்கல்லூரியுடன் இணைந்திருக்கும் மேலப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் 10.7.1914 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. (கடந்த 1999ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலை இடித்துவிட்டு, மீண்டும் புதிய பிரம்மாண்டமான பள்ளிவாசல் ஒன்றை கட்டி 2001ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.)

ஆதார நூல்கள்

  1. திருவாரூர் மாவட்ட ஊர்ப் பெயர்கள்
  2. இஸ்லாமிய கலைகளஞ்சியம்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.