பெர்னி மாக்

பெர்னி மாக் (Bernie Mac), பிறப்பு பெர்னார்ட் ஜெஃப்ரி மெக்கல (அக்டோபர் 5, 1957-ஆகஸ்ட் 9, 2008) ஒரு அமெரிக்க நடிகரும் மேடைச் சிரிப்புரையாளரும் ஆவார்.

பெர்னி மாக்
Bernie Mac

ஓஷன்ஸ் 13 திரைப்படத்தின் திறப்பு விழாவில் பெர்னி மாக்
இயற் பெயர் பெர்னார்ட் ஜெஃப்ரி மெக்கல
பிறப்பு அக்டோபர் 5, 1957(1957-10-05)
சிக்காகோ, இலினொய், அமெரிக்கா
இறப்பு ஆகத்து 9, 2008(2008-08-09) (அகவை 50)[1]
சிக்காகோ, இலினொய், அமெரிக்கா
தொழில் நடிகர், மேடைச் சிரிப்புரையாளர்
நடிப்புக் காலம் 1977–2008
துணைவர் ரான்டா மெக்கல (1977–2008)

சிக்காகோவில் பிறந்த பெர்னி மாக் முதலில் மேடைச் சிரிப்புரையாளராக பணி புரிந்தார். எச்பிஓ தொலைக்காட்சியில் டெஃப் காமெடி ஜாம் என்ற நிகழ்ச்சியில் மேடைச் சிரிப்புரை செய்து புகழுக்கு வந்தார். 1990களில் நடிக்க ஆரம்பித்து 1995இல் ஐஸ் கியூப் உடன் ஃப்ரைடே (Friday) திரைப்படத்தில் நடித்து திரைப்பட உலகத்தில் புகழுக்கு வந்தார். இதற்கு பிறகு ஓஷன்ஸ் 11, மிஸ்டர் 3000, பாட் சான்டா, பூடி கால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2001இல் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் த பெர்னி மாக் ஷோ என்ற ஒரு நகைச்சுவைத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். 2006 வரை இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது.

2008இல் நுரையீரலழற்சி நோய் காரணமாக இறந்தார்.

மேற்கோள்கள்

  1. Le Mignot, Suzanne (August 9, 2008). "Actor and comedian Bernie Mac dies at age 50". CBS2Chicago. மூல முகவரியிலிருந்து October 21, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-03-27.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.