ஐஸ் கியூப்
ஐஸ் கியூப் (Ice Cube, அல்லது "பனிகட்டி"), பிறப்பு ஓஷே ஜாக்சன் (O'Shea Jackson, ஜூன் 15, 1969) ஒரு அமெரிக்க ராப் இசைப் பாடகரும் நடிகரும் ஆவார்.
Ice Cube ஐஸ் கியூப் | |
---|---|
![]() 2012 ஐஸ் கியூப் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஓ'ஷே ஜாக்சன் |
பிற பெயர்கள் | டான் மெகா |
பிறப்பு | சூன் 15, 1969 |
பிறப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
இசை வடிவங்கள் | மேற்கு கடற்கரை ராப் இசை, கேங்க்ஸ்ட ராப் |
தொழில்(கள்) | ராப் இசைப் பாடகர், கூடைப்பந்தாட்ட நிபுணர், இசை தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் |
இசைத்துறையில் | 1985 – இன்று |
வெளியீட்டு நிறுவனங்கள் | பிரையாரிட்டி ரெக்கர்ட்ஸ் (1987-இன்று) லென்ச் மாப் ரெக்கர்ட்ஸ் (1994-இன்று) ஈஎம்ஐ (2006-இன்று) |
இணைந்த செயற்பாடுகள் | த டி.ஓ.சி., வெஸ்ட்சைட் கனெக்சன் , கிரேசி டூன்ஸ், டூ ஷார்ட், யோ-யோ, பப்லிக் எனெமி, என்.டபிள்யூ.ஏ., ஸ்னூப் டாக், த கேம், ஐஸ் டி, டாக்டர் ட்ரே |
இணையதளம் | www.icecube.com |
வரலாற்றில் மிகச்சிறந்த ராப் இசைக் கலைஞர்களில் ஒருவர் என்று பல ராப் இசை நிபுணர்களால் குறிப்பிட்ட ஐஸ் கியூப் என்.டபிள்யூ.ஏ. என்ற ராப் இசைக் குழுமத்தில் ஒரு உறுப்பினராக இருந்து முதலாக ராப் உலகத்தில் சேர்ந்தார். என்.டபிள்யூ.ஏ. உடன் புகழுக்கு வந்து 1990இல் அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட் என்ற முதலாம் தனி ஆல்பத்தை படைத்தார். இதுவும் இவரின் அடுத்த ஆல்பம், டெத் செர்ட்டிஃபிகேட்டும் இவரின் மிக புகழான ஆல்பம்கள் ஆகும். இவர் கேங்க்ஸ்ட ராப் என்ற ராப் இசை வகையை தொடங்கினர்களில் ஒன்றாவார். இவரின் ராப் பாடல்களில் இன மோதல், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூகமும் பிரச்சனைகளும், ஐக்கிய அமெரிக்க அரசியல் போன்ற நோக்கங்களைப் பற்றி பாடல்களை எழுதுவார்.
1992இல் இவர் இஸ்லாம் சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். நடு 1990கள் முதல் நடிக்க தொடங்கினார். கிரிஸ் டக்கர் உடன் 1995இல் வெளிவந்த ஃபிரைடே என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து திரைப்பட உலகில் புகழுக்கு வந்தார். இவரின் வேறு சில புகழ்பெற்ற திரைப்படங்கள் பார்பர்ஷாப், ஆர் வீ தேர் யெட், பாய்ஸ் இன் த ஹுட் ஆகும்.
ஆல்பம்கள்
- 1990: அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட் (AmeriKKKa's Most Wanted)
- 1990: கில் அட் வில் (Kill At Will)
- 1991: டெத் சர்ட்டிஃபிகேட் (Death Certificate)
- 1992: த பிரெடட்டர் (The Predator)
- 1993: லீத்தல் இஞ்செக்சன் (Lethal Injection)
- 1998: வார் & பீஸ் - வால்யும் 1: த வார் டிஸ்க் (War & Peace - Volume 1: The War Disc)
- 2000: வார் & பீஸ் - வால்யும் 2: த பீஸ் டிஸ்க் (War & Peace - Volume 2: The Peace Disc)
- 2006: லாஃப் நௌ, க்ரை லேட்டர் (Laugh Now, Cry Later)
- 2008: ரா ஃபுட்டெஜ் (Raw Footage)