பெரியபாளையம்
பெரியபாளையம் - (ஆங்கிலம்: Periyapalayam) திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் வருவாய் கிராமமும்[4], எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும்[5] ஆகும். இங்குள்ள அருள்மிகு பவானியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள முக்கியமான அம்மன் வழிபாட்டுத்தலங்களுள் ஒன்று. ஆண்டுதோறும் ஆடி மாதம் முழுவதும் இவ்வூர் பக்தர்களால் நிரம்பியிருக்கும்.
பெரியபாளையம் | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பெயர்க் காரணம்
பாளையம் என்றால் "படை வீடு" (இராணுவத் தளம்). பெரியபாளையம் என்பது பெரிய படைவீடு எனப் பொருள்படும். [6]
அமைவிடம் மற்றும் மக்கட்தொகை
பெரியபாளையம், சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில், சென்னை - செங்குன்றம் - காரணோடை - ஊத்துக்கோட்டை - புத்தூர் மாநில நெடுஞ்சாலையில், ஆரணியாற்றங்கரையில் அமைந்துள்ளது.
2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பெரியபாளையத்தின் மொத்த மக்கட்தொகை 5420 இதில், ஆண்கள் 2756 மற்றும் பெண்கள் 2664 [7]
பவானியம்மன் திருக்கோயில்
பெரியபாளையம் என்ற சிற்றூர், இங்குள்ள அருள்மிகு ரேணுகாதேவி பவானியம்மன் திருக்கோயில் மூலமே அடையாளம் காணப்படுகிறது. இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன், ஊரின் பெயராலே பெரியபாளையத்தம்மன் என்று வழங்கப்படுகின்றார். ஆண்டின் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் முழுவதும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்தும், ஆந்திர மாநிலம் - புத்தூர், நகரி, நாகலாபுரம், நெல்லூர் ஆகிய இடங்களிலிருந்தும் குடும்பமாக வந்து கோயிலை சுற்றியுள்ள திறந்த வெளியில் முகாமிட்டு, அம்மனையும் தரிசித்து செல்வது வழக்கம்.
சான்றுகள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=01¢code=0003&tlkname=Uthukkotai#MAP
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=01&blk_name=Ellapuram&dcodenew=2&drdblknew=13
- "Malaimalar".
- "Thiruvallur District Official website".