காரிய சித்தி கணபதி கோயில்

ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில் தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பஞ்செட்டி அஞ்சல், நத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு

முன்பொரு சமயம் சிவதரிசனம் செய்ய பிரமன் சென்றபோது முருகரால் வழிமறிக்கப்பட்டு ஒம் எனும் பிரணவத்தின் பொருள் சொல்லுமாறு பணிக்க்கப்படுகிறார். தெரியாத பிரமன் சிறைப்படுத்த படுகிறார். பிரணவ உபதேசம் பெற்ற பிரம்மா மீண்டும் படைப்பு தொழிலை தொடங்க தடைபடுகிறது.நாரதரின் ஆலோசனையின் பேரில் பிரம்மன் இங்கு வந்து கணபதியைகுறித்து தவமியற்றி காரியசித்தி அடைந்ததாக தல வரலாறு. பிரம்மன் வழிபட்ட பிள்ளையாரான ஸ்ரீ காரியசித்தி கணபதி தொந்தியின்றி முக்கண்ணோடு மேலிரு கரங்களில் ருத்ராட்சமும் கோடரியும் ஏந்திகீழிரு கரங்களில் மோதகமும் தந்தமும் ஏந்தி தாமரைபீடத்தில் அமர்ந்துள்ளது போல கணபதியின் திருவுருவச்சிலை அமைந்துள்ளது.

சிறப்புகள்

திருமணத் தடை உள்ளவர்கள் ஒருகிலோ பச்சரிசி, வெல்லம் அருகம்புல் படைத்து ரோஜா மாலை சாற்றி சிதறு காய் செலுத்தி 16 பிரதட்சணம் வந்து அர்ச்சனை செய்து வழிபட திருமணத்தடை அகன்று திருமணம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள வாலீஸ்வரரையும் ஆனந்தவல்லியையும் வழிபட ராகு கேது சர்ப்ப தோஷங்கள் அகலும், முருகனக்கு வெண் சங்கு தீபம் ஏற்றி எதிரில் உள்ள மஹாவிஷ்ணுவுக்கு தயிர்சாதம் படைத்து வழிபட மாமியார் மருமகள் பிரச்சனை விலகும்; அர்த்த்நாரீ கோலத்தில் உள்ள சண்டேஸ்வரரை வழிபட தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். பிரதோஷ வழிபாடு இங்கு செய்வதால் சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷவழிபாடு செய்வதன் மும்மடங்கு பலன் கிடைக்கும் எனவும் தலபுராணம் கூறுகிறது.

செல்லும் வழி

சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் காரனோடைப்பாலம் அடுத்து பஞ்செட்டி நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 3 கீ.மி தொலைவு சென்றால் நத்தம் கிராமத்தை அடையலாம். சென்னை கோயம்பேட்டிலிருந்து 58சி, 112ஏ, 112பி, 132, 133, 131ஏ, 113, 533 ஆகிய வழித்தடப் பேருந்துகள் பஞ்செட்டிக்கு செல்லுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.