பெரிய அண்டிலிசு
பெரிய அண்டிலிசு (Greater Antilles) கரிபியக் கடலில் பெரியத் தீவுகளின் தொகுப்பாகும்; கியூபா, (எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு உள்ளடக்கிய) லா எசுப்பானியோலா, புவேர்ட்டோ ரிக்கோ, ஜமேக்கா, மற்றும் கேமன் தீவுகள் இதில் அடங்கும். முழுமையான மேற்கிந்தியத் தீவுகளின் நிலப்பரப்பில் 90% பெரிய அண்டிலிசில் உள்ளது.[1] தவிரவும் 90% க்கும் மேற்பட்ட மக்கள்தொகையும் இத்தீவுகளில்தான் உள்ளனர்; மிகுதி கிழக்கிலுள்ள சிறிய அண்டிலிசு தீவுகளில் உள்ளனர்.
பெரிய அண்டிலிசு Grandes Antilles (பிரெஞ்சு) Antillas Mayores (எசுப்பானியம்) | |
---|---|
கரிபிய மண்டலம் | |
![]() கரிபியனில் அமைவிடம். | |
தீவு நாடுகள் | |
பரப்பளவு | |
• மொத்தம் | 207 |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 37 |
• அடர்த்தி | 169.05 |
Time zones | கிநேவ: ஒ.ச.நே - 05:00/ஈடிடி: ஒ.ச.நே - 04:00 |
அத்திலாந்திக்கு நேர வலயம்: ஒ.ச.நே - 04:00/அ.பகல்சேமிப்பு நேரம்: ஒ.ச.நே - 03:00 |
புதிய உலகத்தை ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பதற்கு முன்னரே அண்டிலிசு என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது; பழங்கால வரைபடங்களில் ஐரோப்பியர்கள் இத்தகையதோர் மர்மமான நிலப்பகுதியை அண்டிலியா (தீவு) எனக் குறிப்பிட்டு வந்தனர். இது சில நேரங்களில் தீவுக் கூட்டமாகவும் சில நேரங்களில் தொடர்ந்த நிலப்பகுதியாகவும் காட்டப்பட்டது; தற்கால கேனரித் தீவுகளுக்கும் யூரேசியாவிற்கும் இடையே இது கடற்பகுதியில் இருந்ததாக நம்பப்பட்டது.
நாடுகள்
நாடும் கொடியும் | பரப்பு (கிமீ²) |
மக்கள்தொகை (1 சூலை 2005 மதிப்.) |
மக்கள் தொகை அடர்த்தி (கிமீ²க்கு) |
தலைநகரம் |
---|---|---|---|---|
![]() |
1,10,860 | 1,13,46,670 | 102.4 | அவானா |
![]() |
264 | 54,878 | 207.9 | ஜார்ஜ் டவுன் |
![]() |
48,730 | 89,50,034 | 183.7 | சான்டோ டொமிங்கோ |
![]() |
27,750 | 81,21,622 | 292.7 | போர்ட்-ஓ-பிரின்ஸ் |
![]() |
10,991 | 27,31,832 | 248.6 | கிங்சுடன் |
![]() |
9,104 | 39,16,632 | 430.2 | சான் வான் |
மொத்தம் | 2,07,435 | 3,50,66,790 | 169.05 | |
மேற்சான்றுகள்
- "Greater Antilles". பார்த்த நாள் 28 May 2015.
மேலும் அறிய
- Cohen, S.; Groene, J.; Werner, L.; Vladimir, U.; Williams, D.; Walter, C.; Hiller, H.L. (1997). Caribbean: The Greater Antilles, Bermuda, Bahamas. Explore the world Nelles guide. Nelles Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-88618-403-3. http://books.google.com/books?id=9BNW8ykfX_EC. 254 pages.
- University, J.R.P.B.S.S. (1995). Anolis Lizards of the Caribbean : Ecology, Evolution, and Plate Tectonics: Ecology, Evolution, and Plate Tectonics. Oxford Series in Ecology and Evolution. Oxford University Press, USA. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-536191-9. http://books.google.com/books?id=ydCJC26WCNQC&pg=PA88.
- Rogozinski, Jan. A Brief History of the Caribbean. New York: Facts on File, 1992.