புல ஆழம்

வில்லையில், குறிப்பாக ஒளிப்படவியலில் புல ஆழம் (depth of field (DOF)) என்பது ஓர் காட்சியில் அருகாமை மற்றம் தொலைவிற்கிடையேயான பொருளின் தூரம் மற்றும் உருவத்தின் தெளிவாகும். எனினும் வில்லை துல்லியமாக ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் மாத்திரம் குவிய முடியும்.[1] தெளிவின் குறை குவியப்பட்ட தூரத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மெதுவாக இடம்பெறும். புல ஆழத்தினுள் குவியாமை சாதாரண பார்வையில் உணர இயலாது காணப்படும்.

பெரும ஒளிப்படத்தில் ஆழமில்லாத புல ஆழம்
புல ஆழத்தினுள்ள பகுதி தெளிவாகவும், புல ஆழத்திற்கு முன்பும் பின்பும் உள்ள பகுதி மங்கலாக தெளிவற்றுக் காணபப்டுகின்றது.

சில வேளைகளில் முழு உருவமும் தெளிவாக விரும்பப்படும் போது பெரிய புல ஆழம் தேவைப்படுகின்றது. சில வேளைகளில் சிறிய புல ஆழம் பயனுள்ளதாகவும், முன் மற்றும் பின்புலத்திற்கு தேவையாகக் காணப்படும். நிழற்படத்தில் பெரிய புல ஆழம் ஆழமான குவிவு எனவும், சிறிய புல ஆழம் ஆழமில்லாத குவிவு எனவும் அழைக்கப்படும்.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "Digital Depth of Field". பார்த்த நாள் 11 பெப்ரவரி 2016.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.