புற்றுநோயியல்

புற்றுநோயியல் (Oncology) என்பது புற்றுநோய் தொடர்பான மருத்துவத் துறை ஆகும். கிரேக்கத்தில் ஒன்கோசு (ὄγκος), என்பது திரள், பொருண்மை, அல்லது கட்டி (உயிரியல்) எனவும் -லாஜி (-λογία), என்பது "கற்கை") எனவும் பொருள்படும்; இதனைக்கொண்டே புற்றுநோயியல் ஆங்கிலத்தில் ஓன்கோலாஜி என அழைக்கப்படுகிறது. இத்துறையில் சிறப்பு மருத்துவக் கல்வி பெற்ற மருத்துவர் புற்றுநோய் மருத்துவர் அல்லது ஓன்கோலாஜிஸ்ட் என அழைக்கப்படுகிறார்.

புற்றுநோய் மருத்துவர்
தொழில்
பெயர்கள் மருத்துவர், சிறப்பு மருத்துவர்
வகை சிறப்பு மருத்துவம்
செயற்பாட்டுத் துறை மருத்துவம்
விவரம்
தேவையான கல்வித்தகைமை Doctor of Medicine, Doctor of Osteopathic Medicine
Residency
Fellowship
தொழிற்புலம் மருத்துவமனைகள், குறுமருத்துவ மனைகள்

புற்றுநோயியல் மருத்துவத்தில்:

  • ஒரு நோயாளிக்கு புற்றுநோய் உள்ளதா என நோய் கண்டறிதல்
  • சிகிட்சை (காட்டாக அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம் மற்றும் பிற செய்முறைகள்)
  • புற்றுநோய்களை வெற்றிகரமாக குணப்படுத்திய பிறகு தொடர் கண்காணிப்பு
  • இறுதிநிலை புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய் தணிப்பு பேணல்
  • புற்றுநோய் கவனிப்பு குறித்த நன்னெறி ஐயங்கள்
  • தேடிக் காணலுக்கான முயற்சிகள்:
    • பொதுமக்களிடையே, அல்லது
    • நோயாளிகளின் உறவினர்களிடையே (மார்பகப் புற்றுநோய் போன்ற பரம்பரை அடிப்படையில் ஏற்படுவதாக நம்பப்படும் புற்றுநோய்களுக்கு)

மேலும் அறிய

  • Vickers, A., Banks, J., et al. Alternative Cancer Cures: "Unproven" or "Disproven"? CA Cancer J Clin 2004 54: 110-118. Full text online

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.