என்புநோயெதிர்ப்பியல்
என்புநோயெதிர்ப்பியல் (Osteoimmunology) என்பது எலும்புத் தொகுதி, நோயெதிர்ப்புத் தொகுதிகளுக்கிடையேயான இடைமுகப்பில் நிகழ்பவற்றைக் குறித்து அண்மைக் காலமாகப் (நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து) ஆராயப்படும்[1][2] என்புநோயெதிர்ப்பு அமைப்பைக்[3][4] குறித்துப் பயில்வதாகும். முதுகெலும்பிகளில் எலும்பு, நோயெதிர்ப்பு தொகுதிகளுக்கிடையேப் பகிர்ந்துக் காணப்படும் கூறுகள், இயங்கு முறைகள் (ஈந்தணைவிகள், ஏற்பிகள், சமிக்ஞை மூலக்கூறுகள், படியெடுக்கும் காரணிகள்) ஆகிவற்றைக் குறித்தும் என்பு-நோயெதிர்ப்பியலில் பயிலப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் என்பு-நோயெதிர்ப்பியலில் என்புப்புற்று, முடக்கு வாதம், எலும்புப்புரை, எலும்புத் தடிமன் நோய் (osteopetrosis), பல்சூழ்திசு அழற்சி (periodontitis) முதலிய நோய்களுக்கானச் சிகிச்சை முறைகள் ஆராயப்பட்டு வருகிறது. இரத்த உயிரணுக்கள், உடலின் வடிவ நோய்க்குறிகளுக்கிடையேயான மூலக்கூற்றுத் தொடர்பாடல்கள் குறித்த உறவுகளை என்பு-நோயெதிர்ப்பியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன[5].
மேற்கோள்கள்
- Arron JR, Choi Y (November 2000). "Bone versus immune system". Nature 408 (6812): 535–536. doi:10.1038/35046196. பப்மெட்:11117729.
- Walsh MC, Kim N, Kadono Y, et al (2006). "Osteoimmunology: interplay between the immune system and bone metabolism". Annu. Rev. Immunol. 24: 33 –63. doi:10.1146/annurev.immunol.24.021605.090646. பப்மெட்:16551243.
- Lorenzo J, Horowitz M, Choi Y (June 2008). "Osteoimmunology: interactions of the bone and immune system". Endocr Rev 29 (4): 403–440. doi:10.1210/er.2007-0038. பப்மெட்:18451259.
- Lorenzo J, Choi Y (2005). "Osteoimmunology". Immunol. Rev. 208: 5–6. doi:10.1111/j.0105-2896.2005.00340.x. பப்மெட்:16313336.
- McHugh K (2008). "Osteoimmunology in skeletal cell biology and disease". Autoimmunity 41 (3): 181–182. doi:10.1080/08916930701694808. பப்மெட்:18365830.