திருச்சி பிரேமானந்தா

பிரேமானந்தர் (Premananda, பிரேமானந்தா, நவம்பர் 17, 1951 - பெப்ரவரி 21, 2011) என்பவர் இந்திய குருவும், தமிழ்நாட்டில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தை நிறுவியவரும் ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றம், மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[1]

சுவாமி பிரேமானந்தர்
Swami Premananda
பிறப்புபிரேம்குமார் சோமசுந்தரம்
நவம்பர் 17, 1951(1951-11-17)
மாத்தளை, இலங்கை
இறப்புபெப்ரவரி 21, 2011(2011-02-21) (அகவை 59)
கடலூர் மத்திய சிறைச்சாலை, இந்தியா
தேசியம்இலங்கையர்
பணிஆன்மிக குரு
வலைத்தளம்
sripremananda.org
பிரேமேசுவரர் கோவில்
பிரேமானந்தரின் சமாதி

வாழ்க்கைக் குறிப்பு

பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரேமானந்தா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையின் மலையகத்தில் மாத்தளை நகரில் தனது ஆசிரமம் ஒன்றையும் அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஈழப்போரை அடுத்து இவரும் இவரது சீடர்களும் 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அவருடைய அனாதை இல்லத்தில் இருந்த சிலரையும் இவர் தன்னுடன் கூட்டிச் சென்றார்.[2]:¶4 ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளியில் ஓர் இடத்தில் தனது ஆசிரமத்தை ஆரம்பித்தார். 1989 இல் பாத்திமாநகருக்கு குடிபெயர்ந்தனர்.[2]:¶4 இந்த ஆசிரமம் ஏறத்தாழ 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலமாகும்.[3] இந்த ஆசிரமத்தி, பல பெண்களும் சிறுவர்களும் அனாதைகளுமாக கிட்டத்தட்ட 200 பேர் வரை தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.[4] இவ்வாசிரமத்தின் கிளைகள் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஏனைய பல நாடுகளிலும் திறக்கப்பட்டன.[3][5]

குற்றச்சாட்டுகள்

இவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்ததாக 1997 ஆம் ஆண்டு எழுந்த பலத்த சர்ச்சை மற்றும் புகார்களின் அடிப்படையில், நடத்தப்பட்ட காவல் துறை புலன் விசாரணையில், குற்றங்கள் நிருபணமாகியதால், இவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் பாலியல் குற்றம், வெளிநாடுகளில் அனுமதியின்றி சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து சிறையில் அடைத்தது. இவருடன் சேர்ந்து குற்றச் செயல் புரிந்த இவருடைய மாமா, பக்கிரிசாமி , மயில் வாகனம் ஆகியோரும் தண்டிக்கப்பட்டனர். பக்கிரிசாமி என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பக்கிரிசாமி 2001 ல் மரணமடைந்தார். தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இருப்பினும் உச்ச நீதிமன்றம் இவருடைய பாலியல் குற்றத்தையும், கொலைக் குற்றத்தையும் உறுதி செய்தது.

இவருக்கு ஆதரவாக வாதாடியவர் இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான இராம் ஜெத்மலானி[6].இவருக்கு எதிராக வாதாடி பிரேமானந்தாவுக்கு இரட்டையாயுள் தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் கும்பகோணத்தை சேர்ந்த கீதாலயன் என்கின்ற சுகுமாரன் ஆவார். இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய பெண் நீதிபதி திருமதி பானுமதி[7]. இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 21 பெப்ரவரி 2011ல் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மரணமடைந்தார்.[8]

மேற்கோள்கள்

  1. "Premananda gets life sentence". இந்தியன் எக்சுபிரசு. 21-08-1997. http://archive.indianexpress.com/Storyold/10248/. பார்த்த நாள்: 1-03-2014.
  2. Madras High Court Verdict December 12, 2012
  3. "Judgment that provoked Jethmalani". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3-06-2005. http://articles.timesofindia.indiatimes.com/2005-06-03/india/27851676_1_swami-premananda-ashram-victims. பார்த்த நாள்: 29-09-2013.
  4. கல்பனா கண்ணபிரான்; ரன்பீர் சிங் (11-11-2008). Challenging The Rules(s) of Law: Colonialism, Criminology and Human Rights in India. SAGE Publications. பக். 100–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-3665-7. https://books.google.com/books?id=EaMGo6zqzNYC&pg=PA100. பார்த்த நாள்: 15-09-2013.
  5. "Holy ghost! Unholy fathers". Tehelka. 14 மே 2005. Archived from the original on 23-07-2015. https://web.archive.org/web/20150723185024/http://archive.tehelka.com/story_main12.asp?filename=hub051405Holy_ghost.asp. பார்த்த நாள்: 29 September 2013.
  6. பிரேமனந்தா வழக்கின் நீதி பார்த்து பரணிடப்பட்ட நாள் 26-04-2009
  7. ஒட்டல் அதிபர் இராஜகோபால் ஜீவஜோதி கணவர் கொலை வழ்க்கில் தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி பானுமதி, பிரேமானந்தாவுக்குத் தண்டனை வழங்கியவர்-செய்தி பார்த்து பரணிடப்பட்ட நாள் 26-04-2009
  8. பிபிசி தமிழ் இணையதள செய்தி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.