ராம் ஜெத்மலானி

ராம் பூல்சந்த் ஜெத்மலானி (Ram Boolchand Jethmalani, 14 செப்டம்பர் 1923 – 8 செப்டம்பர் 2019)[2] இந்தியாவின் முன்னணி வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்தியாவின் சட்ட அமைச்சராகவும், இந்திய வழக்குரைஞர் கழகத்தின் தலைவராகவும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கழகத் தலைவராகவும் பணியாற்றினார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் பங்கேற்று விமர்சனங்களை எதிர்கொண்டார்.

ராம் ஜெத்மலானி
Ram Jethmalani
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
8 சூலை 2016  8 செப்டம்பர் 2019
முன்னவர் குலாம் ரசூல் பல்யாவி, ஐக்கிய ஜனதா தளம்
தொகுதி பீகார்
பதவியில்
5 சூலை 2010  4 சூலை 2016
தொகுதி ராஜஸ்தான்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
சூன் 1999  சூலை 2000
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் மு. தம்பிதுரை
பின்வந்தவர் அருண் ஜெட்லி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1998  14 சூன் 1999
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
சட்டம், நீதித்துறை அமைச்சர்
பதவியில்
16 மே 1996  1 சூன் 1996
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977–1984
முன்னவர் ஹரி இராமச்சந்திர கோகலே
பின்வந்தவர் சுனில் தத்
தொகுதி வடமேற்கு மும்பை
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 14, 1923(1923-09-14)
சிக்கார்புர், மும்பை மாகாணம், இந்தியா
(இன்றைய சிந்து மாகாணம், பாக்கித்தான்)
இறப்பு 8 செப்டம்பர் 2019(2019-09-08) (அகவை 95)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (2013 வரை)
இராச்டிரிய ஜனதா தளம் (2016)
வாழ்க்கை துணைவர்(கள்) துர்கா ஜெத்மலானி (தி. 19412019) «start: (1941)end+1: (2020)»"Marriage: துர்கா ஜெத்மலானி to ராம் ஜெத்மலானி" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF)

இரத்னா ஜெத்மலானி (தி. 19472019) «start: (1947)end+1: (2020)»"Marriage: இரத்னா ஜெத்மலானி to ராம் ஜெத்மலானி" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF)

இருப்பிடம் 2, அக்பர் வீதி, புது தில்லி[1]
படித்த கல்வி நிறுவனங்கள் சகானி சட்டக் கல்லூரி, கராச்சி, பம்பாய் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர், நியாயவாதி, சட்டப் பேராசிரியர், அரசியல்வாதி, தொழிலதிபர், வள்ளல்
சமயம் சிந்தி இந்து
இணையம் www.ramjethmalanimp.in

பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெத்மலானி தனது 17-வது அகவையில் சட்டப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு, தனது பிறந்த ஊரான சிக்கார்பூரில் வழக்கறிஞராக இந்தியப் பிரிப்பு வரை பணியாற்றினார். இந்தியப் பிரிவினையை அடுத்து மும்பைக்கு குடியேறி, தனது தொழிலை ஆரம்பித்தார். இவருக்கு துர்கா, இரத்னா என இரு மனைவிகளும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். பிள்ளைகளில் மகேசு, இராணி ஆகியோர் பிரபலமான வழக்கரிஞர்கள் ஆவர். 2017 ஆம் ஆண்டில் இராம் வழக்கறிஞர் தொழிலில் இருந்து இளைப்பாறினார். இந்திய வழக்கறிஞர்களிலேயே மிகக்கூடுதலான ஊதியம் பெற்றவராகவும் அறியப்படுகிறார்.[3]

தனது அரசியல் வாழ்வில், ஜெத்மலானி இத்திய-பாக்கித்தான் உறவை மேம்படுத்தவே பெரிதும் பாடுபட்டார். இவர் இரண்டு தடவைகள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அடல் பிகாரி வாச்பாயின் முதலாவது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் வாச்பாயை எதிர்த்து 2004 ஆம் ஆண்டில் லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். பின்னர் 2010 இல் மீண்டும் பாசக-வில் இனைந்து மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.

ஜெத்மலானி 1977 ஆம் ஆண்டில் சட்டத்துக்கூடான உலக அமைதி அமைப்பினால் மனித உரிமைகளுக்கான விருதைப் பெற்றார். இவர் பல சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Members Webpage – Rajyasabha". Rajyasabha, Parliament of India. மூல முகவரியிலிருந்து 29 May 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 February 2013.
  2. Sep 8, TIMESOFINDIA COM | Updated:. "Ram Jethmalani, eminent lawyer and former Union law minister, passes away | India News - Times of India" (en).
  3. http://indiatoday.intoday.in/site/Story/87820/50%20Power%20People%20of%20India/Ram+Jethmalani:+Argumentative+Indian.html Indian Today: Ram Jethmalani: Argumentative Indian
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.