ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை (Life imprisonment, life sentence, life-long incarceration அல்லது life incarceration) ஓர் தீவிரமான குற்றம் புரிந்த குற்றவாளி தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறுத் தரப்படும் குற்றவியல் தண்டனையாகும். கொலை, தேசத்துரோகம், போதைமருந்து கடத்துதல், பிறருக்கு ஊறு விளைவிக்குமாறு நிகழ்த்திய திருட்டு போன்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்தத் தண்டனை அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்படுவது இல்லை. 1884ஆம் ஆண்டிலேயே போர்த்துக்கல் சிறை சீர்திருத்தங்களின்படி இந்தத் தண்டனையை விலக்கியது. இது தண்டனையாகக் கொடுக்கப்படும் பல நாடுகளிலும் சிறைநாட்களின் சில பகுதிகளை வெளியே வாழும்படி, தண்டனைக்காலத்தைக் குறைக்குமாறு வேண்டிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தண்டனை குறைத்தல் அல்லது "முன்னதான விடுதலை" குற்றவாளியின் சிறைக்கால நடத்தையை ஒட்டி சில நிபந்தனைகளுடன் அளிக்கப்படும்.

இவ்வாறு தண்டனையைக் குறைப்பதற்கான காலமும் வழிமுறைகளும் நாடுகளுக்கேற்ப மாறுபடும். சில நாடுகளில் குறைந்த ஆண்டுகளிலேயே இந்த விண்ணப்பிக்க இயலும்; வேறுசில நாடுகளில் பல ஆண்டுகள் கழித்தே விண்ணப்பிக்க இயலும்.இருப்பினும் குறைத்தலைக் கேட்பதற்கான இந்த கால அளவு எப்போது குறைத்தல் ஆணை இடப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ரோம் பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின் 110ஆவது விதிகளின்படி போர் குற்றங்கள், இனவழிப்பு போன்ற தீவிரமான குற்றங்கள் புரிந்த ஒருவர் குறைந்தது மூன்றில் இருபங்கு காலம் அல்லது 25 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதன்பிறகு நீதிமன்றம் மறுஆய்வு செய்து தண்டனையைக் குறைக்கலாம்.

உலகளவில்

உலகின் பல நாடுகளில் ஆயுள் தண்டனை.
நீலம் ஆயுள் தண்டனை நீக்கப்பட்ட நாடுகள்.
சிவப்பு ஆயுள் தண்டனை வழங்குபவை.
பச்சை ஆயுள் தண்டனை சில கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்படும் நாடுகள்.
வெண்கருமை நிகழ்நிலை அறியாது, சட்ட உடன்பாடாக கருதப்படுவை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.