பிசுமத்தீன்

பிசுமத்தீன் (Bismuthine) என்பது BiH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் பிசுமத்தேன் என்ற பெயரால் இச்சேர்மம் அழைக்க்ப்படுகிறது. கனமான அமோனிய ஓரினவரிசைச் (நிக்டோகென் ஐதரைடு) சேர்மமான பிசுமத்தீன் நிலைப்புத்தன்மையற்ற ஒரு சேர்மமாகும். 0 °செல்சியசு வெப்பநிலைக்குக் கீழ் இது சிதைவடைந்து பிசுமத் உலோகமாகிறது. எதிர்பார்க்கப்பட்டது போலவே பிசுமத்தீன் H-Bi-H இணைப்புகளின் பிணைப்புக் கோணங்கள் 90 பாகைகள் கொண்ட பட்டைக்கூம்பு கட்டமைப்பை ஏற்றுள்ளது[1].

பிசுமத்தீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசுமத்தேன்
வேறு பெயர்கள்
பிசுமத் டிரை ஐதரைடு
ஐதரசன்பிசுமத்தைடு
பிசுமின்
இனங்காட்டிகள்
18288-22-7 Y
ChemSpider 8886 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9242
பண்புகள்
BiH3
வாய்ப்பாட்டு எடை 212.00 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 0.008665 கி/மி.லி (20 °செ)
கொதிநிலை 16.8 °C (62.2 °F; 289.9 K)
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

பிசுமத்தீன் என்ற சொல் கரிம பிசுமத்(III) குடும்பத்து சேர்மங்களின் உறுப்பினர் என்பதையும் குறிக்கிறது. இவற்றின் பொது வாய்ப்பாடு BiR3, ஆகும். இங்கு R என்பது கரிமபதிலியைக் குறிக்கிறது. உதாரணமாக Bi(CH3)3 , டிரைமெத்தில்பிசுமத்தைன் ஒரு கரிமபிசுமத்தீன் சேர்மமாகும்.

மெத்தில்பிசுமத்தீனை (BiH2Me) மறுபங்கீடு செய்து பிசுமத்தீ (BiH3) தயாரிக்கப்படுகிறது:[2]

3 BiH2Me → 2 BiH3 + BiMe3

தேவைப்படும் BiH2Me, இதுவும் வெப்பச்சிதைவு அடையக்கூடியதாகும். மெத்தில்பிசுமத்டைகுளோரைடை (BiCl2Me) இலித்தியம் அலுமினியம் ஐதரைடுடன் ( LiAlH4.) சேர்த்து ஒடுக்க வினையின் மூலம் இதைத் தயாரிக்கலாம்[1]. SbH3,இன் பண்புகளை ஒத்திருக்கும் BiH3 நிலைப்புத்தன்மை இல்லாமல் வெப்பத்தால் சிதைவடைந்து கூறிலுள்ள தனிமங்களாகப் பிரிகிறது.

2 BiH3 → 3 H2 + 2 Bi (ΔHf'ogas = −278 kJ/mol)

ஆர்சனிக்கைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் மார்சு சோதனை முறையைப் பயன்படுத்தியே பிசுமத்தீனையும் கண்டறிய முடியும். வெப்பச்சிதைவு என்ற அடிப்படையே இம்முறையில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது, இச்சிதைவால் பிசுமத், ஆர்சனிக், ஆன்டிமணி முதலான தனிமங்கள் வீழ்படிவாகின்றன. மேலும் இவை அவற்றின் கரைதிறனைக் கொண்டு பிரித்தறியப்படுகின்றன. ஆர்சனிக் NaOCl கரைசலிலும், அமோனியம் பாலிசல்பைடு கரைசலில் ஆன்டிமணியும், பிசுமத் இவையிரண்டிலும் கரையாமலும் வேறுபடுகின்றன.

பயன்கள்

பிசுமத்தீனின் குறைவான கரைதிரன் காரணமாக ஒர் இடைநிலை விளைபொருள் என்பதைத் தவிர தொழில்நுட்ப பயன்பாடுகளிலிருந்து இது விலக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. W. Jerzembeck; H. Bürger; L. Constantin; L. Margulès; J. Demaison; J. Breidung; W. Thiel (2002). "Bismuthine BiH3: Fact or Fiction? High-Resolution Infrared, Millimeter-Wave, and Ab Initio Studies". Angew. Chem. Int. Ed. 41 (14): 2550–2552. doi:10.1002/1521-3773(20020715)41:14<2550::AID-ANIE2550>3.0.CO;2-B. http://www3.interscience.wiley.com/journal/96516335/abstract.
  2. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001.ISBN 0-12-352651-5.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.