பி. மாதவன்
பார்த்தசாரதி மாதவன் (1928 - திசம்பர் 16, 2003) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், "அருண் பிரசாத் மூவீஸ்" என்ற பெயரில் 39 திரைப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
பி. மாதவன் | |
---|---|
பிறப்பு | 1928 |
இறப்பு | திசம்பர் 16, 2003 75) சென்னை | (அகவை
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1963–1992 |
பணி
- பி. மாதவன் ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் ஶ்ரீதர் ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
- இவர் 1963 ஆம் ஆண்டு ஏ. எல். எஸ் பிக்சர்ஸ் தயாரித்த மணியோசை இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
- அதன் பின் சிவாஜி கணேசன் உடன் இணைந்து அன்னை இல்லம் உட்பட அதை தொடர்ந்து 15 படங்கள் சிவாஜி கணேசனை வைத்து இயக்கியுள்ளார்.
- எம். ஜி. ஆர் வைத்து தெய்வத்தாய் என்ற ஒரே படத்தை இயக்கினார்.
- எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் தேவிகா, சௌகார் ஜானகி, கே. ஆர். விஜயா, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, சாரதா, மஞ்சுளா, உஷாநந்தினி, ஸ்ரீபிரியா ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார்.
- இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில மணியோசை, அன்னை இல்லம், தெய்வத்தாய், எங்க ஊர் ராஜா, குழந்தைக்காக, கண்ணே பாப்பா, வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி, நிலவே நீ சாட்சி, சபதம், தேனும் பாலும், ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், சங்கர் சலீம் சைமன், ஏணிப்படிகள், ஹிட்லர் உமாநாத், அக்னி பார்வை. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
- இதில் குழந்தைக்காக, ராமன் எத்தனை ராமனடி, நிலவே நீ சாட்சி, பட்டிக்காடா பட்டணமா, ஆகிய திரைபடங்களுக்கு தேசிய திரைப்பட விருது பெற்றார்.
- இவருடன் கதாசிரியர்களான கே. பாலசந்தர், வியட்நாம் வீடு சுந்தரம், பாலமுருகன் ஆகியோர் இவருடைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள்.
- பின்பு இவர் சொந்தமாக அருண்பிரசாத் மூவிஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதிலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கினார்.
- எம். ஜி. ஆர் திரைப்பட நகரின் முதலாவது தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
விருதுகள்
இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படங்கள்
- மணியோசை (1963)
- அன்னை இல்லம் (1963)
- தெய்வத்தாய் (1964)
- நீலவானம் (1965)
- பெண்ணே நீ வாழ்க (1967)
- முகூர்த்த நாள் (1967)
- எங்க ஊர் ராஜா (1968)
- குழந்தைக்காக (1968)
- கண்ணே பாப்பா (1969)
- வியட்நாம் வீடு (1970)
- ராமன் எத்தனை ராமனடி (1970)
- நிலவே நீ சாட்சி (1970)
- சபதம் (1971)
- தேனும் பாலும் (1971)
- ஞான ஒளி (1972)
- பட்டிக்காடா பட்டணமா (1972)
- ராஜபார்ட் ரங்கதுரை (1973)
- மாணிக்கத் தொட்டில் (1974)
- முருகன் காட்டிய வழி (1974)
- தங்கப்பதக்கம் (1974)
- கஸ்தூரி விஜயம் (1975)
- மனிதனும் தெய்வமாகலாம் (1975)
- மன்னவன் வந்தானடி (1975)
- பாட்டும் பரதமும் (1975)
- சித்ரா பௌர்ணமி (1976)
- என்னைப்போல் ஒருவன் (1976)
- தேவியின் திருமணம் (1977)
- சங்கர் சலீம் சைமன் (1978)
- என் கேள்விக்கு என்ன பதில் (1978)
- வீட்டுக்கு வீடு வாசப்படி (1979)
- ஏணிப்படிகள் (1979)
- குருவிக்கூடு (1980)
- நான் நானே தான் (1980)
- ஆடுகள் நனைகின்றன (1981)
- ஹிட்லர் உமாநாத் (1982)
- சத்தியம் நீயே (1984)
- கரையை தொடாத அலைகள் (1985)
- சின்னக்குயில் பாடுது (1987)
- அக்னி பார்வை (1992)
- உதவி இயக்கம் :-
- யார் பையன் (1957) டி.ஆர்.ரகுநாத் இயக்கம்
- கல்யாண பரிசு (1959) ஶ்ரீதர் இயக்கம்
- மீண்ட சொர்க்கம் (1960) ஶ்ரீதர் இயக்கம்
- விடிவெள்ளி (1960) ஶ்ரீதர் இயக்கம்
- தேன் நிலவு (1961) ஶ்ரீதர் இயக்கம்
- சுமைதாங்கி (1962) ஶ்ரீதர் இயக்கம்
- நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) ஶ்ரீதர் இயக்கம்
- போலீஸ்காரன் மகள் (1962) ஶ்ரீதர் இயக்கம்
- பொண்ணுக்கு தங்க மனசு (1973) தேவராஜ்-மோகன் இயக்கம்
- பாலூட்டி வளர்த்த கிளி (1976) தேவராஜ்-மோகன் இயக்கம்
மறைவு
மாதவன் 2003 திசம்பர் 16 அன்று தனது 75-வது அகவையில் சென்னையில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
- "[http://www.cinesouth.com/cgi- bin/persondb.cgi?name=p.madhavan P. Madhavan]". cinesouth.com. பார்த்த நாள் 2 June 2011.
- "Film director Madhavan". The Hindu. 17 December 2003. http://www.hindu.com/2003/12/17/stories/2003121709580500.htm. பார்த்த நாள்: 2 June 2011.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.