பாகல்

பாகல் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் பண்படுத்தாத(rouch) செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.[1] பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.[2][3] இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.[4]

பாகற்காய்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Cucurbitales
குடும்பம்: வெள்ளரிக் குடும்பம்
பேரினம்: Momordica
இனம்: M. charantia
இருசொற் பெயரீடு
Momordica charantia
Descourt.

வளரியல்பு

இம்மூலிகைக் கொடி 5 மீட்டர் (16 அடி) நீளம் வரை வளரக்கூடிய இயல்புடையதாகும். இதன் இலையமைவு, எளிய, மாறுபட்ட கோணத்தில் இருக்கும். இலையளவு 4–12 செ. மீ. (1.6–4.7 அங்குலம்) இலை விளம்புகள் ஆழமாக பிளவுபட்டு, 3-7 வரை பிரிந்து, உள்வாங்கி இருக்கும். ஒவ்வொரு தாவரமும் தனித்தனியான ஆண், பெண் மலர்களைக் கொண்டு இருக்கும். பூமியின் வடகோளத்தில் சூன், சூலை மாதங்களில் பூக்கும் இயல்புடையதாக இருக்கிறது. கனியாதல் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறுகிறது. கனியானது அடர் மஞ்சள் நிறத்திலும், விதைகள் பட்டையாக மஞ்சள் நிறத்திலும், சதைப்பகுதி சிவப்பாகவும் இருக்கும். இச்சதைப்பகுதியை அப்படியே சமைக்காமல் சாலட் ஆக உண்ணும் வழக்கம் பல தெற்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.[5] நன்கு பழுத்தக்கனி, ஆரஞ்சு நிறமாக மாறும் இயல்புடையது ஆகும்..

வகைகள்

சீன இனம்
இந்திய இனம்
மிதி பாகல்

பாகற்காயில் பல வகைகள் உள்ளன. அவற்றின் அளவிலும், வடிவத்திலும் இவை வேறுபடுகின்றன.இருப்பினும், வேளாண்மையினர் இருவகை இனங்களையே விளைவிக்கின்றனர். ஒன்று பொடியாக, 6–10 cm (2.4–3.9 in) அளவு இருப்பது, இதனை மிதி / குருவித்தலை பாகற்காய் என்கின்றனர். இவ்வினம் இந்தியாவிலும், வங்காள தேசத்திலும் மற்றொன்று பெரிதாக நீளமாக இருக்கும். அதனை கொம்பு பாகற்காய் என்றழைக்கின்றனர். இந்த கொம்பு பாகல் இனங்கள் இந்தியாவிலும் சீனத்திலும் வேறுபட்டு இருக்கின்றன. இந்திய இனம் அடர் பச்சை நிகூறமாகவும், முனைகள் கூராகவும் இருக்கும்., சீன பாகலின் அளவு 20–30 cm (7.9–11.8 in) இருக்கும்.வெளிர் பச்சை நிறத்திலும், முனைகள் மழுங்கியும் இருக்கிறது.

மருத்துவ ஆய்வுகள்

  1. Momordica charantia var. muricata
    • இச்சிற்றினத்தின் பச்சைச்சாறை உண்பதால், ஆக்சிசனேற்ற அயற்சி (Oxidative stress), இழைநார்ப் பெருக்கம், , கல்லீரல் சிதைவு (hepatic damage in CCl4) போன்றவை தடுக்கப்படுவதாக எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபித்துள்ளன.[6]
  2. Momordica charantia var. charantia என்ற இரு சிற்றின வகைகள், மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.[7][8]

ஊட்டசத்து

பாகற்காய்
உப்பில்லா வேகவைத்த, நீர்வடித்த உணவு
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 20 kcal   80 kJ
மாப்பொருள்     4.32 g
- சர்க்கரை  1.95 g
- நார்ப்பொருள் (உணவு)  2 g  
கொழுப்பு0.18 g
புரதம் 0.84 g
நீர்93.95 g
உயிர்ச்சத்து ஏ  6 μg1%
தயமின்  0.051 mg  4%
ரிபோஃபிளாவின்  0.053 mg  4%
நியாசின்  0.28 mg  2%
பான்டோதெனிக் அமிலம்  0.193 mg 4%
உயிர்ச்சத்து பி6  0.041 mg3%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  51 μg 13%
உயிர்ச்சத்து சி  33 mg55%
உயிர்ச்சத்து ஈ  0.14 mg1%
உயிர்ச்சத்து கே  4.8 μg5%
கால்சியம்  9 mg1%
இரும்பு  0.38 mg3%
மக்னீசியம்  16 mg4% 
பாசுபரசு  36 mg5%
பொட்டாசியம்  319 mg  7%
சோடியம்  6 mg0%
துத்தநாகம்  0.77 mg8%
Link to USDA Database entry
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

காட்சியகம்

மேற்கோள்கள்

  1. http://plants.usda.gov/core/profile?symbol=MOCH2#
  2. Home remedies-vol.1 T.V.Sairam – p.161
  3. Bachok, M. F.; Yusof, B. N.; Ismail, A; Hamid, A. A. (2014). "Effectiveness of traditional Malaysian vegetables (ulam) in modulating blood glucose levels". Asia Pacific journal of clinical nutrition 23 (3): 369–76. doi:10.6133/apjcn.2014.23.3.01. பப்மெட்:25164446.
  4. Bagchi, Indrani (11 April 2005). "Food for thought: Green 'karela' for Red China". Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2005-04-11/india/27857106_1_karela-india-and-china-white-horse-temple.
  5. http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?24520#dist
  6. http://www.greenmedinfo.com/article/supplementation-fresh-ucche-momordica-charantia-l-var-muricata-willd-prevented
  7. http://www.researchgate.net /publication228360784_ Medicinal_uses _and_ molecular_ identification_ of_ two_ Momordica_charantia _varietiesa _review
  8. http://proseanet.org/prosea/e-prosea_detail.php?frt=&id=343

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.