கசப்பு (ஒலிப்பு) மனிதர்களின் நாவினால் உணரப்படக்கூடிய சுவைகளில் ஒன்றாகும். இந்த சுவை பொதுவாக விரும்பப்படாத சுவையாகும். இருப்பினும், சில சமையல்களில் இவற்றை சேர்ப்பது உண்டு. இந்தச் சுவை பொதுவாக வெறுக்கப்படுவதால், "கசப்பு" என்ற சொல், ஒரு மனிதரின் ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள வெறுப்புணர்வை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.