பல்திஸ்தான்


பல்திஸ்தான் (Baltistan) இதனை குட்டி திபெத் என்றும் அழைப்பர். இமயமலைத் தொடரில் உள்ள காரகோரம் மலையின், கே-2 கொடுமுடியின் தெற்கில், 3,350 மீட்டர் உயரத்தில் பல்திஸ்தான் அமைந்துள்ளது.

பல்திஸ்தான்
སྦལ་ཏི་སྟཱན

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீல நிறத்தில் பல்திஸ்தான் (அடர் நீல நிறம்: ஸ்கர்டு மாவட்டம், காஞ்சி மாவட்டம், சிகார் மாவட்டம் மற்றும் கர்மாங் மாவட்டம்)
வெளிர் நீல நிறத்தில் கார்கில்)
ஆள்கூறுகள்: 35°18′N 75°37′E
நாடுகள்
பிரதேசம்
மாவட்டங்கள்
  • ஸ்கர்டு
  • காஞ்சி
  • சிகார்
  • கர்மாங்
  • லே[3]
பரப்பளவு
  மொத்தம்72,000
ஏற்றம்1,500
மக்கள்தொகை (2017)
  மொத்தம்922
மொழிகள்திபெத்திய பல்தி மொழி, உருது, கஷ்மீரி மற்றும் வட்டார மொழிகள்

ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தில் இருந்த பல்திஸ்தான் பகுதியை, 1947ல் இந்தியப் பிரிவினையின் போது, பாகிஸ்தான் அரசு இராணுவத்தின் தூண்டிதலின் பேரில், பஷ்தூன் பழங்குடி மக்கள், பல்திஸ்தான் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.

பல்திஸ்தானின் மேற்கில் கில்கித், வடக்கில் சீனாவின் சிஞ்சியாங், தென்கிழக்கில் லடாக், தென்மேற்கில் மற்றும் காஷ்மீர் சமவெளி எல்லைகளாக உள்ளது. [4][5]

வரலாறு

1840ல் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் குலாப் சிங், ஜில்ஜிட் - பல்திஸ்தான் பகுதிகளை ஆப்கானியர்களிடமிருந்து கைப்பற்றினார். [6]

ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தில் லடாக் மற்றும் பல்திஸ்தான் பகுதிகள் ஒரே மாவட்டமாக நிர்வகிக்கப்பட்டது. பல்திஸ்தான் மாவட்டம் ஸ்கர்டு, கார்கில் மற்றும் லே என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டிருந்தது. [7]

26 அக்டோபர் 1947 அன்று ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை எதிர்த்து, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பஷ்தூன் பழங்குடிகள் மேற்கு காஷ்மீர் பகுதிகள் மற்றும் பல்திஸ்தான் & கில்கித் உள்ளிட்ட வடக்கு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து, ஆசாத் காஷ்மீர் எனப்பெயரிட்டனர். [8] காஷ்மீர் சமவெளி, ஜம்மு பகுதி, லே மாவட்டம் மற்றும் கார்கில் மாவட்டங்கள் இந்தியாவுடன் இணைந்தது.

1971 இந்திய - பாகிஸ்தான் போருக்குப் பின், பல்திஸ்தானின் துர்துக் கிராமம், நூப்ரா பள்ளத்தாக்கு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[9][10]

இப்பகுதியில் இசுலாம் பெரும்பான்மை சமயமாக இருப்பினும், துவக்க காலத்தில் பல்திஸ்தன் பகுதிகளில் பௌத்த சமயத்தைப் பின்பற்றும் திபெத்திய பல்தி மக்கள் வாழ்ந்தனர்.

இராஜதந்திர பூர்வமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பல்திஸ்தான் முக்கிய மையமாக உள்ளது. கார்கில் போர் மற்றும் சியாச்சின் போர்களுக்கு பல்திஸ்தான் பகுதி முக்கியத்துவம் கொண்டது.

புவியியல்

பல்திஸ்தான் தலைநகரம் ஸ்கர்டு

பல்திஸ்தான் உயரமான மலைக் கொண்டது. இதன் வடக்கில் பல்தோரா பனிபடர்ந்த கொடுமுடிகள் கொண்டது.

சிந்து ஆறு பல்திஸ்தான் வழியாக பாய்கிறது. இதன் முக்கிய சமவெளிகள், காப்புலு, ரொவுண்டு ஆகும்.

பல்திஸ்தான் கிராமம்
பல்தோரா கொடுமுடி
லைலா கொடுமுடி, பல்திஸ்தான்

பல்திஸ்தான் சமவெளிகளும், மாவட்டங்களும்

சமவெளி மாவட்டம் பரப்பு (km²) மக்கள்தொகை (1998) தலைமையிடம்
காப்புலு சமவெளி
காஞ்சி மாவட்டம்9,40088,366காப்புலு
ஸ்கர்டு சமவெளி
ஸ்கர்டு மாவட்டம்18,000219,209ஸ்கர்டு
சிகார் சமவெளி
சிகார் மாவட்டம்6,45060,295சிகார்
கார்மாங்
கார்மாங்5,52062,522தோல்தி
ரவுண்டு சமவெளி
ஸ்கர்டு மாவட்டம்80,000தோவார்
குலதாரி
ஸ்கர்டு
சியோக்°
லே மாவட்டம்4,000 (2011)துர்துக்

மக்கள் தொகையியல்

2017ம் ஆண்டின் கணக்குப் படி,பல்திஸ்தான் மலைப்பகுதிகளின் மக்கள் தொகை 9,22,745 ஆகவுள்ளது. இங்குள்ள பலதரப்பட்ட இனக்குழுக்களில், திபெத்திய பல்தி மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். [11].

சமயங்கள்

பல்திஸ்தான் பகுதிகளில் இசுலாம் அறிமுகம் ஆவதற்கு முன்னர், போன் பௌத்தம் மற்றும் திபெத்திய பௌத்தம் முக்கிய சமயமாக விளங்கியது.

கிபி ஏழாம் நூற்றாண்டுகளில் திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக பல்திஸ்தான் விளங்கியது. பல்திஸ்தானின் ஸ்கர்டு பகுதிகளில் பண்டைய பௌத்த தொல்லியல் களங்கள் அதிகமாக உள்ளது.

கிபி 16 - 17ம் நூற்றாண்டுகளில் சூபியிசம் பரவியதால், பல்திஸ்தானின் பெரும்பான்மையான மக்கள் நூர்பக்சியா இசுலாம் பிரிவைத் தழுவினர். [12]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. "Suddenly Indian - OPEN Magazine".
  2. Khan, Aaquib. "Turtuk, a Promised Land Between Two Hostile Neighbours".
  3. "Turtuk: The last undiscovered place in Leh-Ladakh" (18 May 2016).
  4. Victoria Schofield (2003) [First published in 2000], Kashmir in Conflict, London and New York: I. B. Taurus & Co, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1860648983, https://books.google.com/books?id=rkTetMfI6QkC&pg=PA8
  5. Cheema, Brig Amar, (2015), The Crimson Chinar: The Kashmir Conflict: A Politico Military Perspective, Lancer Publishers, p. 30, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7062-301-4, https://books.google.com/books?id=Qc25BwAAQBAJ&pg=PA30
  6. (in en) Proceedings - Punjab History Conference. Punjabi University. 1968.
  7. Kaul, H. N. (1998), Rediscovery of Ladakh, Indus Publishing, p. 88, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-086-6, https://books.google.com/books?id=mg8My6WaWRcC&pg=PA88
  8. Victoria Schofield (2003) [First published in 2000], Kashmir in Conflict, London and New York: I. B. Taurus & Co, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1860648983, https://books.google.com/books?id=rkTetMfI6QkC&pg66
  9. Atul Aneja, A 'battle' in the snowy heights, The Hindu, 11 January 2001.
  10. "In pictures: Life in Baltistan". bbc.com. பார்த்த நாள் 13 May 2015.
  11. Hussain, Ejaz. "Geography and Dempgraphy of Gilgit Baltistan (GB Scouts)".
  12. "NYF".

ஆதார நூற்பட்டி

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.