வெள்ளைத் திமிங்கிலம்
வெள்ளைத் திமிங்கிலம் (ஆங்கிலம்: Beluga, அறிவியல் பெயர்: Delphinapterus leucas) என்பது வட துருவப் பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகை திமிங்கிலம் ஆகும். கடற்பாலூட்டி குடும்பத்தில் இந்த இனம் மட்டுமே வெள்ளை நிறத் தோற்றம் கொண்ட இனமாகும். இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. பெண்பால் வகையை விட ஆண்வகைகள் பெரிதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1,360 கிலோகிராம் வரையும் பெண் 900 கிலோகிராம் வரையும் எடை கொண்டவை. பொதுவாக, பிறக்கும்போது 1.5 மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும்.
வெள்ளைத் திமிங்கிலம் | |
---|---|
![]() | |
![]() | |
சராசரி மனிதனுடன் உருவ அளவு ஒப்பீடு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | இரட்டைப்படைக் குளம்பி |
உள்வரிசை: | கடற்பாலூட்டி |
குடும்பம்: | ஒற்றைப்பல் வகையி |
பேரினம்: | Delphinapterus |
இனம்: | D. leucas |
இருசொற் பெயரீடு | |
Delphinapterus leucas (Pallas, 1776) | |
![]() | |
பலூகாவின் பரவல் |
மேற்கோள்கள்
- Cetacean Specialist Group (1996). Delphinapterus leucas. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2007-12-21.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.