தேங்காய் நண்டு

தேங்காய் நண்டு (coconut crab) என்பது உலகின் இன்று வாழும் மிகப் பெரிய கணுக்காலி உயிரினம் ஆகும். இவை 10 கால்களையும் மற்றும் ஓட்டினாலான உடலமைப்பையும் கொண்டது. இவை சுமார் 40 செமீ நீளமும், 4.1 கிகி நிறையும் உடையவை. இவை மரங்களின் மீது, குறிப்பாக தென்னை மரங்களின் மீது ஏற வல்லவை. இந்த நண்டினங்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்குட்பட்ட தீவுகளில் மட்டும் காணப்படுகின்றன‌. இவ்வகை நண்டுகள் கடலில் முட்டையிடும். சில நாள்களுக்குப் பின்னர் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், சிப்பி மற்றும் சங்குகளில் ஒட்டிக் கொண்டு வாழத் தொடங்கும். ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த பின்னர், நிலத்தில் குழிகளைத் தோண்டி, அதில் தேங்காய் நார்களைப் பரப்பி வாழும்.[1]

போறா-போறா தீவுகளில் தேங்காய் நண்டுகள்
தேங்காய் நண்டு

Data Deficient  (IUCN 2.3)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: Crustacea
வகுப்பு: Malacostraca
பெருவரிசை: Eucarida
வரிசை: Decapoda
துணைவரிசை: Pleocyemata
உள்வரிசை: Anomura
பெருங்குடும்பம்: Paguroidea
குடும்பம்: Coenobitidae
பேரினம்: Birgus
இனம்: B. latro
இருசொற் பெயரீடு
Birgus latro
L, 1767
Coconut crabs occur on most coasts in the blue area
வேறு பெயர்கள்

Burgus latro (lapsus)

இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியான கிருஸ்த்மஸ் தீவில் வாழும் இந்த வகை நண்டுகள் 3 அடிகள் நீளத்துடன், 4 கிலோ எடைகள் கொண்டதாக உள்ளது. இது தன் ஒரு காலால் ஒரு தேங்காயை உடைக்கும் திறன் படைத்ததாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. ராமேஸ்வரம் ராஃபி (20 நவம்பர் 2013). "மதுரை: அழியும் அபாயத்தில் தேங்காய் நண்டுகள்!". தி இந்து. பார்த்த நாள் 25 நவம்பர் 2013.
  2. மசாலா: ராட்சச நண்டுகள்! தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.