ஆவுளியா

ஆவுளியா அல்லது கடல் பசு (Dugong) எனும் கடல் உயிரினம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது ஆகும். இதனைப்போல் உள்ள உயிரினங்கள் மேன்டீஸ் (manatees) என்று அழைக்கப்படும் கடல் பசு மற்றும் செரினியா (Sirenia) எனும் கடல் பசுவும் ஆகும். இவ்வகை விலங்கினங்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கடற்கரை ஓரமாக மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்ந்து வருகிறது. மேலும் குறைந்த எண்ணிக்கையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் இவை காணப்படுகின்றன. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாநில விலங்கு இதுவே. இது ஆழம் குறைந்த பகுதியில் வாழுகிறது. இதனை மீனவர்கள் பிடித்து எண்ணெய்க்காகவும், உணவுக்காகவும் அழித்து வருகிறார்கள். [2] இவ்வகையான விலங்குகள் கடல் பூங்காவில் பாதுகாக்கப்படுகிறது. இது 400 கிகி எடையும், 3 மீட்டர்கள் நீளமும் கொண்ட உடலை உடையது. பார்ப்பதற்கு கடல் பசு போன்ற தோற்றத்தில் காணப்படும். இதன் ஆயுட்காலம் 70 ஆண்டுகள் ஆகும். இதனை கடல் கன்னி,[3] கடல் பசு, கடல் பன்றி, கடல் ஒட்டகம்[4] எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். இது அந்தமான் நிக்கோபாரின் மாநில விலங்காகும்.

ஆவுளியா (Dugong)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி தொகுதி
வகுப்பு: கடல் பாலூட்டி
வரிசை: Sirenia
குடும்பம்: Dugongidae
Gray, 1821
துணைக்குடும்பம்: Dugonginae
Simpson, 1932
பேரினம்: Dugong
Lacépède, 1799
இனம்: D. dugon
இருசொற் பெயரீடு
Dugong dugon
(Müller, 1776)
ஆவுளியாவின் வாழ்விடம்

மேற்கோள்

  1. "Dugong dugon". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
  2. விளிம்பில் ஆவுளியா
  3. Winger, Jennifer (2000). "What's in a Name: Manatees and Dugongs". National Zoological Park. பார்த்த நாள் 22 July 2007.
  4. Reeves et al. 2002. National Audubon Society Guide to Marine Mammals of the World. Knopf. ISBN 0-375-41141-0. pp. 478-481
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.