முதுகெலும்பிலி

முதுகெலும்பிலி (இலத்தீன்: Invertebrata) முதுகெலும்பு இல்லாத ஓர் உயிரினம். உலகில் உள்ள உயிரினங்களில் முதுகெலும்பில்லாத உயிரினங்களே அதிகம் சுமார் 10 லட்சம் உயிரினங்களில் 8 லட்சத்துக்கு மேற்பட்டவை முதுகெலும்பு இல்லாதவைகளாகும். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை பல பகுதிகளாக பகுத்துள்ளனர் அறிவியல் அறிஞர்கள். அவற்றுள் புரோட்டோசோவா ஒரே உயிரணுவால் இயங்கும் இனமாகும். மற்ற உயிரினங்கள் செய்யும் சுவாசித்தல்,உணவு உண்ணல், உணவை ஜீரணித்தல், எஞ்சும் கழிவுப் பொருட்களை வெளியயேற்றுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் ஓரணுவுக்குள்ளே செய்கின்றது. ஆனால், இந்த ஓரணு உயிரினங்கள் அளவில் மிக நுண்ணியவைகளாக இருப்பதால் அவற்றை மைக்ரோ ஸ்கோப் மூலமாகத் தான் பார்க்க முடியும். இவற்றில் சிலவற்றில் மேற்பகுதி சற்று கடினத் தன்மை கொண்ட ஓடுகளால் அமைந்தது. இந்த நுண்ணுயிரிகளின் இறந்த தொகுதியே கடலில் கிடைக்கும் சீமைச் சுண்ணாம்பு ஆகும். புரோட்டோசோவா உயிரினங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாய் பிரிந்து தனித்தனி உயிர்களாய் பெருக்கமடைகின்றன. புரோட்டோசோவா உயிரினங்களில் 30 ஆயிரம் வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Invertebrata

வகைப்பாடுகள்

மெல்லுடலிகள்

முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மற்றோரு வகை பவளப் பூச்சிகள், கடல் சாமந்தி, ஜெல்லி மீன் போன்றவைகளாகும். நாடாப்புழு, ஈரல் புழு போன்றவை தட்டைப் புழுக்கள் எனும் வேறு வகையைச் சார்ந்தது. கொக்கிப் புழு, நாக்குப் புழு, நரம்பு சிலந்திப் புழு போன்றவை உருண்டைப் புழு என்ற மற்றோர் வகையைச் சார்ந்தததாகும். கிளிஞ்சல், நத்தை போன்றவை சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட மெல்லுடலிகளாகும்.

பிற முதுகெலும்பிகள்

ஆக்டோபஸ் எனும் எண்காலிகள் போன்றவையும் இவ்வகையைச் சார்ந்தது. நட்சத்திரமீன், கடல் வெள்ளரி போன்ற கடல் வாழ் உயிரினங்களும் முதுகெலும்பில்லாதவைகளே. முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மிகப் பெரியவை கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்டு ஆகும். முதுகெலும்பில்லா உயிரினங்களில் நன்மை அளிப்பவையும், தீமை அளிப்பவையும் உண்டு. பட்டுப்பூச்சி, தேனீ, அரக்குப் பூச்சி போன்றவை நன்மை செய்பவை. விசத்தன்மை கொண்ட பாம்புகள்,பூச்சிகள் ஏராளம் உள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.