கடற்காஞ்சொறி

கடற்காஞ்சொறி (Cnidaria) என்பது பவளங்கள், கடற்சாமந்தி மற்றும் கடல் இழுதுகள் உட்பட 10000இற்கும் மேற்பட்ட நீர்வாழ் விலங்குகளை உள்ளடக்கிய தொகுதி ஆகும். இவற்றின் தனித்துவமான வேறுபிரித்தறிய உதவும் இயல்பு காஞ்சொறி உயிரணுக்களைக் கொண்டிருப்பதாகும். காஞ்சொறி உயிரணுக்களைக் கொண்டு இவை இரையை பிடித்து உண்ணுகின்றன. இவற்றின் உடல் பிரதானமாக இடைப்பசை என்னும் உயிரற்ற இழுது போன்ற பொருளால் ஆக்கப்பட்டுள்ளது. இவை அக மற்றும் புற முதலுருப் படைகளை மாத்திரம் கொண்டுள்ள Diploblastica விலங்குகளாகும். இவ்விரு படைகளும் ஒற்றைக் கலத் தடிப்பானவையாகும். இவ்விரு படைகளுக்கிடையே இடைப்பசை காணப்படுகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் நிடேரியாக்கள் மிகவும் எளிய உடற்கட்டமைப்பைக் கொண்டுள்ள விலங்குகளாகும். எனினும் இவற்றில் பஞ்சுயிரிகளைப் போலல்லாது மெய்யான இழைய வியத்தம் காணப்படுகின்றது. இவை ஒரு கலத்தடிப்புடையதால் இவற்றில் சுவாசத்துக்கென விசேடமான உறுப்புகள் விருத்தியடைவதில்லை. நீரில் கரைந்துள்ள ஒக்சிசன் எளிய பரவல் மூலம் உடலுக்குள் உள்ளெடுக்கப்படுகின்றது. இவற்றில் மெய்யான உணவுக்கால்வாய் காணப்படுவதில்லை. இவற்றின் வாயே குதமாகவும் தொழிற்படுகின்றது. இவற்றில் உள்ள எளிய நரம்புத்தொகுதி உடல் முழுவதும் கணத்தாக்கங்களைக் கடத்தி உடலைக் கட்டுப்படுத்துகின்றது. நரம்புத் தொகுதியில் மையக்கட்டுப்பாடு/ மைய நரம்புத்தொகுதி காணப்படுவதில்லை. இவை ஆரைச் சமச்சீரான விலங்குகளாகும்.

கடற்காஞ்சொறி
புதைப்படிவ காலம்:580–0 Ma
PreЄ
Pg
N
எடிக்காரன்–தற்காலம்
Pacific sea nettles, Chrysaora fuscescens
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரிகள்
திணை: விலங்கு
துணைத்திணை: Eumetazoa
தொகுதி: நிடேரியா
Hatschek, 1888
உபகணங்களும் வகுப்புக்களும்
  • உபகணம் Anthozoa
  • உபகணம் Medusozoa—ஜெலி மீன்கள்:
    • Cubozoa—பெட்டியுரு ஜெலிமீன், கடற்குளவிகள்
    • Hydrozoa—ஐதரா
    • Scyphozoa—உண்மையான ஜெலிமீன்கள்
    • Staurozoa—stalked jellyfish
  • வகைப்படுத்தப்படாதவை
    • Myxozoaparasites
    • Polypodiozoa—parasites

பழைமையான வகைப்பாட்டில் டெனோபோர்களுடன் (கணம்-Ctenophore) சேர்த்து சீலந்தரேட்டா/ குழியுடலிகள் என வகைப்படுத்தப்பட்டன. எனினும் இரண்டுக்குமிடையே பல வேறுபாடுகள் காணப்படுவதால் இவை இரண்டும் தற்போது வெவ்வேறு கணங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. நிடேரியாக்கள் நான்கு பிரதான வகுப்புக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அந்தோசோவா (Anthozoa), ஸ்கைபோஸோவா, கியூபோசோவா, ஐதரோசோவா என்பவையே அவையாகும்.

வேறுபடுத்தும் இயல்புகள்

ஏனைய விலங்குக் கணங்களைப் போலல்லாது நிடேரியாவை இலகுவாக வேறுபடுத்தலாம். தனிச்சிறப்பியல்புகள்:

  • நைடோசைட்டுகள் (அழன்மொட்டுச் சிறைப்பை)
  • ஆரைச்சமச்சீரான உடல்
  • இரு படைகளுள்ள (Diploblastica) விலங்குகள்
  • தட்டையக் குடம்பி (planula larva)
  • அகமுதலுருப்படை, புற முதலுருப்படை இடையே இடைப்பசை காணப்படல்
  • தசை மேலணிக் கலங்கள் காணப்படல்.
  • எளிய கான்களற்ற சனனிகள் உள்ளமை
  • உதரக் கலன்குழி
 பஞ்சுயிரிகள்[1][2]நிடேரியன்கள்[3][4]Ctenophore[3][5]இருபக்கச்சமச்சீர் விலங்குகள்[3]
நைடோசைட்டுக்கள் இல்லைஉள்ளனஇல்லை
கொலோபிலாஸ்டுக்கள் இல்லைஉள்ளனஇல்லை
சமிபாட்டுத் தொகுதி, சுற்றோட்டத் தொகுதி இல்லைஉள்ளது
முதலுருப் படைகளின் எண்ணிக்கை இரண்டு, இரண்டுக்குமிடையில் ஜெலி போன்ற உயிரற்ற இடைப்பசைஇரண்டு[3] அல்லது மூன்று[5][6]மூன்று
புலனங்கங்கள் இல்லைஉள்ளன
இடைப்பசையிலுள்ள கல எண்ணிக்கை பலசிலஇடைப்பசை இருப்பதில்லை
வெளிப்புறக் கலங்கள் உட்புறம் வந்து தொழிலை மாற்றுதல் ஆம்இல்லை(பொருத்தமானதல்ல)
நரம்புத் தொகுதி இல்லைஉள்ளது, எளிமையானதுஉள்ளது
தசைகள் இல்லைமேற்றோல் தசைக்கலங்கள்மயோஎபித்தீலியல் தசைக்கலங்கள்மயோசைட்டுக்கள்

உடற்கூற்றியல்

வாயெதிர் அந்தம்
வாயந்தம்
வாய்
வாயந்தம்
வாயெதிர் அந்தம்
     புற முதலுருப் படை
     அகமுதலுருப் படை
     இடைப்பசை
     குழிக்குடல்
மெடூஸா (இடப்பக்கம்) மற்றும் பொலிப்பு (வலப்பக்கம்)[4]

நிடேரியன்கள் இரு வகைகளில் உள்ளன: முழு வளர்ச்சியடைந்த பின் மெடூஸா வடிவமுடையவை, மற்றையன பொலிப் வடிவமுடையன. மெடூஸா வடிவ நிடேரியன்களால் நன்றாக அசைய முடியும். ஆனால் பொலிப் வடிவ நிடேரியன்களால் பெரிதாக அசைய முடியாது. இவற்றில் தலை என்றொரு பகுதி காணப்படுவதில்லை. இவை ஆரைச்சமச்சீரான உடலைக் கொண்டுள்ளன. இவற்றின் உடலின் ஓரப்பகுதியில் பல பரிசக்கொம்புகள் காணப்படும். இப்பரிசக் கொம்புகளிலுள்ள பல நைடோசைட்டுக்களால் இரையை அல்லது எதிரியைத் தாக்குகின்றன. மெடூஸாக்களில் இடைப்பசை தடிப்பானதாகவும், பொலிப்புகளில் மெல்லியதாகவும் உள்ளது.

வன்கூடு

அனேகமான நிடேரியாக்களில் எவ்வித மெய்யான வன்கூடும் காணப்படுவதில்லை. மெடூஸாக்களில் இடைப்பசை மாத்திரமே வன்கூடாகத் தொழிற்படுகின்றது. கடல் அனிமனி, ஐதரா போன்ற பொலிப்புகள் உணவுண்ணாத போது தமது வாயை மூடி குழிக்குடலுக்குள் நீரைச் சேமிக்கின்றன. இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள நீர் நீர்நிலையியல் வன்கூடாகத் தொழிற்படுகின்றது. நிடேரியாக்களில் பவளங்கள் மாத்திரமே மெய்யான வன்கூட்டைக் கொண்டுள்ளன. பவளங்கள் உறுதியான கல்சியம் காபனேற்றாலான புறவன்கூட்டைத் தொகுக்கின்றன.

பிரதான கலப்படைகள்

நிடேரியாக்களில் இரு பிரதான கலப்படைகள் உள்ளன. அவை அகமுதலுருப் படையும், புற முதலுருப் படையுமாகும். இவற்றில் இடை முதலுருப் படை காணப்படுவதில்லை. எனவே இவை Diploblastic விலங்குகளாகும். இவ்விரு படைகளும் மேற்றோல் கலங்கள் போலத் தொழிற்படுகின்றன. இவ்வகைக் கலங்கள் தவிர தசைக் கலங்களும், நரம்புக் கலங்களும், நைடோசைட்டுக்களும் காணப்படுகின்றன. அக-முதலுருப் படையில் சமிபாட்டு நொதியங்களைச் சுரக்கும் கலங்களும் உள்ளன. நரம்புக் கலங்கள் மையப்படுத்தல் இன்றி உடல் முழுவதும் பரந்துபட்டுப் பரவியுள்ளன. இடைப்பசையிலும் சொற்பளவான கலங்கள் உள்ளன.

நிடோசைட்டுக்கள்

அழன்மொட்டுச் சிறைப்பையின் கட்டமைப்பு

இவை பாதுகாப்பு அல்லது இரை கௌவல் தொடர்பான கலங்களாகும். இவை அதிகமாக பரிசக் கொம்புகளிலும் (tentacles) புற முதலுருப் படையிலும் காணப்படுகின்றன. இவை நிடேரியாக்களில் மட்டும் காணப்படும் தனித்துவமான கல வகையாகும். மூன்று வகையான நிடோசைட்டுக்கள் அறியப்பட்டுள்ளன.

  • அழன்மொட்டுச் சிறைப்பைகள்- விஷம் ஏற்றக்கூடிய முட்களுள்ள கலங்கள். இவை இரையினுள் அல்லது எதிரியினுள் விஷத்தை ஏற்றுகின்றன.
  • ஸ்பைரோசிஸ்டுக்கள்
  • டைக்கோசிஸ்டுக்கள்

இனப்பெருக்கம்

நிடேரியாக்கள் துண்டுபடல் மூலம் இலிங்கமில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

 1 
 2 
 3 
 4 
 5 
 6 
 7 
 8 
 9 
 10 
 11 
 12 
 13 
 14 
ஜெலி மீனொன்றின் வாழ்க்கை வட்டம்:
1–3 வாழிடம் தேடும் குடம்பி
4–8 வளரும் பொலிப்பு
9–11 பொலிப்பு விருத்தியடைந்து மெடூஸாக்களை உருவாக்கல்
12–14 மெடூஸா வளர்தல்

இலிங்க முறை இனப்பெருக்கம்

நிடேரியாக்களின் இலிங்க முறை இனப்பெருக்கத்தில் இலிங்க நிலையான மெடூஸா நிலையும், பொலிப்பு நிலையும் காணப்படுகின்றன. இது நேரடியற்ற விருத்தியாகும். சில இனங்களில் பொலிப் நிலை காணப்படுவதில்லை. ஐதரா போன்ற சில இனங்களில் மெடூஸா நிலை காணப்படுவதில்லை. பொலிப்புகள் வளர்ச்சியடைந்து மெடூஸாக்களை உருவாக்குகின்றன. மெடூஸாக்களிலிருந்து முட்டைக்கலங்களும், விந்துக் கலங்களும் புறத்தேயுள்ள நீருக்குள் விடுவிக்கப்படுகின்றன. இவை புறக்கருக்கட்டலடைந்து சிறிய குடம்பிகள் உருவாகின்றன. இவை வளர்வதற்கென ஒரு மேற்பரப்பைத் தேர்ந்தெடுத்து பொலிப்பு நிலையை அடைகின்றன. பொலிப்பு மற்றும் மெடூஸா நிலைகளில் ஆட்சியுடைய/ வாழ்நாளில் அதிக காலத்தைப் பிடிக்கும் நிலையைக் கொண்டு நிடேரியாக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஜெலி மீன்களில் மெடூஸா நிலையே ஆட்சியுடைய நிலையாகும். பவளங்களில் பொலிப்பு நிலையே ஆட்சியுடைய நிலையாகும். சில இனங்களில் மேற்கூறியவாறு ஒட்டுமொத்தமாக ஒரு நிலை இழக்கப்பட்டு விடுகின்றது.

வகைப்பாடு

நிடேரியாக்கள் அவைகளின் உடற்கூற்றியல் மற்றும் இனப்பெருக்க முறைகளின் அடிப்படையில் நான்கு பிரதான வகுப்புக்களாகப் பிரிக்கப்படுகின்றன.

HydrozoaScyphozoaCubozoaAnthozoa
அறியப்பட்ட இனங்களின் எண்ணிக்கை 3,600228426,100
உதாரணங்கள் ஐதராஜெல்லி மீன்பெட்டி ஜெல்லிகடல் அனிமனி, பவளங்கள்
இடைப்பசையில் கலங்கள் இல்லைஉள்ளனஉள்ளனஉள்ளன
மேற்றோலில் அழன்மொட்டுச் சிறைப்பைகள் இல்லைஉள்ளனஉள்ளனஉள்ளன
வாழ்க்கை வட்டத்தில் மெடூஸா நிலை சில இனங்களில் உள்ளதுStauromedusae உபவகுப்பு இனங்களைத் தவிர உள்ளதுஉள்ளதுஇல்லை
ஒரு பொலிப்பால் உருவாக்கப்படும் மெடூஸாக்களின் எண்ணிக்கை பலபலஒன்றுமெடூஸா நிலை இல்லை

மேற்கோள்கள்

  1. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). Invertebrate Zoology (7 ). Brooks / Cole. பக். 76–97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-025982-7.
  2. Bergquist, P.R., (1998). "Porifera". in Anderson, D.T.,. Invertebrate Zoology. Oxford University Press. பக். 10–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-551368-1.
  3. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). Invertebrate Zoology (7 ). Brooks / Cole. பக். 182–195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-025982-7.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.