தொ. பரமசிவன்
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (பிறப்பு: 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பண்பாட்டு ஆய்வாளர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். தமிழில் இயங்கிவரும் முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.[1]
பணிபுரிந்த கல்லூரிகள் & பல்கலைக்கழகங்கள்
- தூய சவேரியர் கல்லூரி, பாளையங்கோட்டை
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
இவரது நூல்கள்
- அறியப்படாத தமிழகம்
- பண்பாட்டு அசைவுகள்
- தெய்வங்களும் சமூக மரபுகளும்
- அழகர் கோயில்
- தெய்வம் என்பதோர்
- வழித்தடங்கள்
- பரண்
- சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)
- சமயங்களின் அரசியல்
- செவ்வி (நேர்காணல்கள்)
- விடு பூக்கள்
- உரைகல்
- இந்துதேசியம்
- நாள்மலர்கள்
மேற்கோள்கள்
1. விடுபூக்கள்
வெளி இணைப்புகள்
- தொகுப்புகள் தளத்தில் தொ.பரமசிவனின் படைப்புகள்
- தொ. பரமசிவனிடம் - தமிழ் மரபு அறக்கட்டளை சுபாஷினி தனி நேர்காணல் - காணொளி
- நேர்காணல் 'தமிழ் இந்து' தளத்தில் தொ.பரமசிவன் நேர்காணல்]
- [1 விடுபூக்கள்