பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை என்பது திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக இப்பகுதி தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது.

1800களில் பாளையங்கோட்டை

கல்விக்கு பெயர் போன இங்கு மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் ஏராளம் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் இருப்பதால் தமிழகத்தின் "ஆக்ஸ்போர்ட்” என்று பாளையங்கோட்டை பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பழமையானது மற்றும் மிகவும் பெயர் பெற்றதும் கூட.[1] இங்கு வ.உ.சி நினைவு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது மற்றும் திருநெல்வேலியின் மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இங்குள்ள ”ஹைகிரவுண்ட்(தமிழில் பாளை மேட்டுப் பகுதி என்றழைக்கப்படுகிறது) என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அனைத்துவகையான நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது திருநெல்வேலியின் புதிய பேருந்து நிலையம் இங்குள்ள வேய்ந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ளது என்பது தனிச் சிறப்பு.

இது திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் கீழே இருக்கிறது.

இது சட்டமன்றத்தினை பொருத்தவரையில் பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)யின் கீழ் வருகிறது. இங்கு மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, ஹைக்கிரவுண்ட், பாளை மார்க்கெட், சமாதானபுரம், என்.ஜி.ஓ காலனிகள், சாந்தி நகர், கே.டி.சி. நகர், பெருமாள்புரம், மகாராஜநகர், தியாகராஜநகர் போன்ற பகுதிகள் குறிப்பிடத்தக்கவை. இதில் ”மேலப்பாளையம்” மக்கள் தொகை அதிகமுள்ள ஊர் இங்கு அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருக்கிறார்கள் இதனால் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை இங்குள்ள வாக்குகளே நிர்ணயம் செய்கின்றன.

சான்றுகள்

  1. "சிறைச்சாலை". பார்த்த நாள் அக்டோபர் 16, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.