தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியா (South Australia) ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் தென் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அடிலெய்ட். இதன் பரப்பளவு 984,377 சதுர கிலோ மீற்றர்கள் ஆகும். ஆஸ்திரேலிய மாநிலங்களில் நான்காவது பெரிய மாநிலமாகும். இதன் எல்லைகளாக மேற்கில் மேற்கு ஆஸ்திரேலியாவும் வடக்கில் வட பிரதேசம், குயின்ஸ்லாந்து ஆகியனவும் கிழக்கில் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்ரோறியா ஆகியனவும் அமைந்துள்ளன. ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்கள் இம்மாநிலத்தில் வசிக்கிறார்கள். சனத்தொகை அடிப்படையில் ஐந்தாமிடத்திலிருக்கும் இம்மாநிலத்தில் ஆஸ்திரேலிய மக்களில் பத்து சதவீதமானோர் வசிக்கின்றனர். விவசாயம், உற்பத்தி மற்றும் அகழ்வுத் தொழில்களே இம்மாநிலத்தின் பொருளாதாரப் பலமாகும்.

தெற்கு ஆஸ்திரேலியா
கொடி சின்னம்
புனைபெயர்(கள்): பண்டிகை மாநிலம்

ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர் அடிலெய்ட்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர் கெவின் ஸ்கார்ஸ்
முதல்வர் மைக் ரான் (தொழிற்கட்சி)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை11
 - செனட்12
மொத்த தேசிய உற்பத்தி (2008-09)
 - உற்பத்தி ($m) $77,991[1] (5வது)
 - தலா/ஆள்வீதம் $48,062 (7வது)
மக்கள்தொகை (சூன் 2009)
 - மக்கள்தொகை 1,622,700 (5வது)
 - அடர்த்தி 1.65/கிமீ² (6வது)
4.3 /சது மைல்
பரப்பளவு 
 - மொத்தம் 10,43,514 கிமீ²
4,02,903 சது மைல்
 - நிலம்9,83,482 கிமீ²
3,79,725 சது மைல்
 - நீர்60,032 கிமீ² (5.75%)
23,178 சது மைல்
உயரம் 
 - அதிஉயர் புள்ளிவூடுரொஃப் மலை
1,435 மீ (4,708 அடி)
 - அதிதாழ் புள்ளிஅயர் நதி
-16 மீ (-52 அடி)
நேரவலயம் UTC+9:30
UTC+10:30 (பசேநே)
குறியீடுகள் 
 - அஞ்சல்SA
 - ISO 3166-2AU-SA
அடையாளங்கள்  
 - விலங்கு மயிர்-மூக்கு வொம்பாட்
(Lasiorhinus latifrons)
 - பறவை பைப்பிங் சிரைக்
 - மலர் ஸ்ட்வர்ட் பாலைவனப் பட்டாணி
(Swainsona Formosa)
 - நீரினம் கடல்டிராகன்
(Phycodurus eques)
 - இரத்தினக்கல் கோமேதகம்
 - நிறங்கள் சிவப்பு, நீலம், பொன்
வலைத்தளம் www.sa.gov.au

அடிக்குறிப்புகள்

  1. 5220.0 - Australian National Accounts: State Accounts, 2008-09 (Reissue), Australian Bureau of Statistics, 22 December 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.