ஆத்திரேலிய செனட் அவை

ஆத்திரேலிய செனட் அவை (Senate) என்பது ஈரவை முறைமையைக் கொண்ட ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். நாடாளுமன்ரத்தின் கீழவை பிரதிநிதிகள் அவை ஆகும். செனட் அவையின் அமைப்பும், அதன் அதிகாரங்களும் ஆத்திரேலிய அரசியலமைப்பின் அதி.I, பகுதி II இல் தரப்பட்டுள்ளது. மேலவையில் மொத்தம் 76 உறுப்பினர்கள் (செனட்டர்கள்) உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 12 செனட்டர்களும், இரண்டு தன்னாட்சி ஆட்சிப் பகுதிகளில் இருந்து ஒவ்வொன்றில் இருந்தும் இருவரும் தெரிவு செய்யப்படுகின்றனர். செனட் உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பொதுவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. செனட் அவை முன்கூட்டியே கலைக்கப்படாவிட்டால், செனட்டர் ஒருவரின் பதவிக்காலம் பொதுவாக ஆறு ஆண்டுகள் ஆகும்.

ஆத்திரேலிய செனட் அவை
Senate
வகை
வகைஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் மேலவை
தலைமை
செனட் தலைவர்ஜான் ஓக், தொழிற்கட்சி
26 ஆகத்து 2008 முதல்
அமைப்பு
உறுப்பினர்கள்76
அரசியல் குழுக்கள்அரசு (31)

எதிர்க்கட்சிக்
கூட்டணி (34)

Crossbench (11)

தேர்தல்
இறுதித் தேர்தல்21 ஆகத்து 2010
அடுத்த தேர்தல்7 செப்டம்பர் 2013
கூடும் இடம்
நாடாளுமன்ற மாளிகை
கான்பரா, தலைநகர்
ஆத்திரேலியா
வலைத்தளம்
செனட்

வழக்கமான நாடாளுமன்ற மக்களாட்சி முறையில் அமைந்துள்ள மேலவைகளைப் போலல்லாமல், ஆத்திரேலிய செனட் அவைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பிரதிநிதிகள் அவையில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒன்றை செனட் அவை தனது பெரும்பான்மை வாக்குகளால் தடுக்க முடியும்.

தற்போதைய நாடாளுமன்றம் 2010 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 36 மாநில செனட்டர்களின் ஆறு-ஆண்டுக்காலப் பதவிக்காலம் 2011 சூலை 1 இல் ஆரம்பமானது. 76-இருக்கைகள் கொண்ட செனட அவையில், கூட்டமைப்பு 34 உறுப்பினர்களையும், தொழிற்கட்சி 31 உறுப்பினர்களைடும் கொண்டுள்ளது. பசுமைக் கட்சி 9 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

வெளி இணப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.