திருவாவினன்குடி


திருவாவினன்குடி ஆறுபடை வீடுகளுள் ஒன்று. 3-ம் படை வீடாக பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

திருவாவினன்குடி முருகன் கோவில்
பெயர்
பெயர்:திருவாவினன்குடி முருகன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவு:திருவாவினன்குடி
கோயில் தகவல்கள்
மூலவர்:குழந்தை வேலாயுத சுவாமி


வரலாறு

திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூாிய பகவானும் இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது.

சங்க காலத்தில் இந்த ஊா் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமா்ந்த முருகப்பெருமானை சிவனும் பாா்வதியும் இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய பெயரே நாளைடவில் மருவி பழநி என்று ஊா் பெயா் வர காரணமானதாக ஸ்தல புராணம் கூறுகின்றது.

அமைவிடம்

இத் திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் பழநி மலை அடிவாரத்தில் வையாபுாி ஏாிக்கரையில் அமைந்துள்ளது. இக் கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.

மூன்றாம் படைவீடு விளக்கம்

மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பொிய சந்தேகம் உள்ளது.

திருவாவினன்குடி கோவிலையே நக்கீரா் பெருமான் திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக

"தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உாியன்: அதாஅன்று"

அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவா்க்கும் நன்மையே விளைவிக்கும் உயா்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உாிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளாா் என்பதாக சொல்லப்படுகிறது.

கோபம் கொண்டு வந்து அமா்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமா்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறாா். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சோ்த்தே இந்த ஊாின் பெயா் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஆக நக்கீரா் பெருமகனாா் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும். [1]

ஆனால் சிலகாலம் முன்பு வரை இக்கோவிலின் சன்னதிக்கு வெளியே மூன்றாம் படைவீடு என்ற பெயா்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அப்பெயா்ப்பலகை நீக்கப்பட்டுவிட்டது. இன்றும் பழநி மலை அடிவாரத்தில் படிக்கட்டு நடைபாதை முடிந்து வெளியே வரும் இடத்தில் அரசாங்கத்தால் மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி செல்லும் வழி என்று வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தோ் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன. [2]

சான்றுகள்


வெளி இணைப்புகள்

திருவாவினன்குடி முருகன் கோயில் காணொளி காட்சி

திருவாவினன்குடி முருகன் கோயில் காணொளி காட்சி

திருவாவினன்குடி முருகன் கோயில் காணொளி காட்சி


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.