திரு. வி. க. நகர்

திரு. வி. க. நகர் (Thiru. Vi. Ka Nagar) என்பது திரு. வி. கல்யாணசுந்தரத்தின் பெயரால் வழங்கப்படும் சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இவ்விடம் வடக்கு சென்னையில் உள்ளது. முற்றிலும் நகரமயமாக்கப்பட்டுள்ளதால் சென்னையின் முக்கியமான பகுதிகளுள் ஒன்றாக திகழ்கிறது.

திரு. வி. க நகர்
அண்மைப்பகுதி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வட்டம் (தாலுகா)பெரம்பூர்
Metroசென்னை
ஏற்றம்5
மொழி
  Officialதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN600011
தொலைபேசி குறியீடு044-2671, 044-2558
நகரத் திட்டமிடல் முகமைCMDA
நகரம்சென்னை
மக்களவைத் தொகுதிவட சென்னை
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிகொளத்தூர்
Civic agencyபெருநகர சென்னை மாநகராட்சி

தொகுதி

இந்த திரு .வி. க .நகரின் பெயரில் ஒரு தொகுதி உள்ளது. ஆனால் இந்தப் பகுதி புதிதாக உருவக்கப்பட்ட தொகுதியான கொளத்தூர் தொகுதியின் ஓர் அங்கமாக திகழ்கிறது.[1] இப்பகுதியின் பெயரில் உள்ள திரு.வி.க.நகர் தொகுதியைச் சேர்ந்த பகுதிகள் பெரம்பூர், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தொப்பு மற்றும் பட்டாளம் ஆகும்.[2]

பிரபலமான பகுதிகள்

திரு. வி. க. நகரில் பல திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளன. இப்பகுதியைச் சார்ந்த பெரம்பூரில் உள்ள பேரங்காடியே வடக்கு சென்னையின் முதல் பேரங்காடி ஆகும். இவ்வூரே சென்னையின் முதல் டிஸ்கோ தண்ணீர் பூங்காவை கொண்டுள்ளது. இதன் பெயர் முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா என்பதாகும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.