தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்

முன்னர் "பூர்ஜ் துபாய் லேக் ஹொட்டேல் அண்ட் சேர்விஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ்" என்னும் பெயரில் அழைக்கப்பட்ட தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் (அரபு மொழி: فندق البحيرة و شقق برج دبي المخدمة), ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு வானளாவி ஆகும். இது துபாய் மால் என்னும் வணிகத் தொகுதி, பழைய நகர், பூர்ஜ் துபாய் ஏரி ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ளது.[2] 303 மீட்டர் உயரத்துடன் கூடிய இக் கட்டிடத்தில் 63 தளங்கள் உள்ளன.[2] இக் கோபுரம், பூர்ஜ் துபாய் என்னும் உலகின் உயரமான கட்டிடத்தை உள்ளடக்கிய, பூர்ஜ் துபாய் வணிகப்பகுதி பெருந் திட்டத்தின் ஒரு பகுதியாகும். [2] 2008 ஏப்ரலில் முழு உயரத்தை அடைந்த இக் கட்டிடம் துபாயின் ஆறாவது உயரமான கட்டிடமும், உலக அளவில் 36 ஆவது உயரமான கட்டிடமும் ஆகும். இது செப்டெம்பர் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது.

தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்
தகவல்
அமைவிடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டதுசெப்டெம்பர் 2008
திறப்புஅக்டோபர் 1, 2008
பயன்பாடுவிடுதி, வதிவிடம்[1]
உயரம்
கூரை306 மீட்டர்கள் (1,004 ft)[1]
தள எண்ணிக்கை63[1]


குறிப்புகள்

  1. "Burj Dubai Lake Hotel & Serviced Apartments". SkyscraperPage.com. பார்த்த நாள் 2007-09-26.
  2. "The Address Downtown Burj Dubai". Emporis.com. பார்த்த நாள் 2007-09-26.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

கட்டுமானப் படங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.