த ஹார்பர் விடுதியும் வதிவிடமும்
த ஹாபர் விடுதியும் வதிவிடமும் இடப்பக்கத்தில் காணப்படுகின்றது. 20 டிசம்பர் 2007
த ஹாபர் விடுதியும் வதிவிடமும் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
தொடக்கம் | 2004 |
கட்டப்பட்டது | 2007 [1][2] |
திறப்பு | November 1, 2007 |
உயரம் | |
Antenna/Spire | 256 m (840 ft) [1][2] |
தள எண்ணிக்கை | 59 [1][2] |
செலவு | 141 million USD [3] |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | கத்தீப் அண்ட் அலாமி கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் [2] |
ஒப்பந்தகாரர் | அல் நபூடா கண்ட்ராக்டிங் (வரை.) [2] |
முகாமை | எமிரேட்ஸ் ஹொட்டேல்ஸ் அண்ட் ரெசிடென்ஸ் [4] |
த ஹாபர் விடுதியும் வதிவிடமும் என்பது 256 மீட்டர்கள் (840 அடி) உயரமும் 59 தளங்களையும் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இது 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. வதிவிடங்களையும் விடுதியையும் கொண்ட இக் கட்டிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், துபாய் மரீனா என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இக் கட்டிடத்தில் 261 வதிவிட அலகுகள் உள்ளன. இவற்றுள், 24 பெரிய தனி அறைகளும், 6 ஒரு படுக்கையறை கொண்ட அலகுகளும், 170 இரண்டு படுக்கையறை அலகுகளும், 55 மூன்று படுக்கையறை அலகுகளும் அடங்கும். இது, எமிரேட்ஸ் ஹொட்டேல்ஸ் அண்ட் ரெசிடென்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தொகுதி.
2007 நவம்பர் முதலாம் தேதி திறக்கப்பட்ட போது இது, எமிரேட்ஸ் மரீனா ஹொட்டேல் அண்ட் ரெசிடென்ஸ் என அழைக்கப்பட்டது.[5] துபாய் மரீனா பகுதியில் பல கட்டிடங்களின் பெயர்களில் "மரீனா" என்னும் சொல் இருந்ததால் அப் பெயர் மாற்றப்பட்டது.[3] To prevent confusion from their constumers, and to keep the nautical theme, the words "Emirates Marina" were changed to "The Harbour."[3]
குறிப்புகள்
- "Emirates Marina Serviced Apartments & Spa". Emporis.com. பார்த்த நாள் 2008-02-02.
- "Al Marsa Tower". SkyscraperPage.com. பார்த்த நாள் 2008-02-02.
- "Emirates Marina Hotel & Residence is Renamed ‘The Harbour Hotel & Residence’". Emirates (2008-01-29). பார்த்த நாள் 2008-02-02.
- "Emirates Hotels and Resorts Portfolio". பார்த்த நாள் 2008-02-02.
இவற்றையும் பார்க்கவும்
- துபாயில் உள்ள உயரமான கட்டிடங்கள்