தி. வே. சங்கரநாராயணன்
டி. வி. சங்கரநாராயணன் (திருவாலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன், பி. மார்ச் 7 , 1945) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயரின் மருமகன் ஆவார் இவர்.
ஆரம்பகால வாழ்க்கை
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பிறந்த இவர், 9 ஆவது வயதில் இசைப் பயிற்சியை தனது மாமா மதுரை மணி ஐயரிடமிருந்து பெற ஆரம்பித்தார்.
தொழில் வாழ்க்கை
இவர் 1968 ஆம் ஆண்டு தனது முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இந்தியா முழுவதிலும், உலகின் பல நாடுகளிலும் இவர் பாடியுள்ளார். பல பாடல் தொகுப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
விருதுகள்
- சங்கீத ரத்னகாரா, 1975; வழங்கியது: வசர் கல்லூரி
- காயக சிகாமணி விருது, 1981; வழங்கியது: பைரவி, அமெரிக்க ஐக்கிய நாடு
- இன்னிசை பேரரசு, 1981; பாரதி கலாமன்றம், டொரோண்டோ
- சுவர லயா ரத்னகாரா விருது, 1986; வழங்கியது: ராமகிருஷ்ணானந்த சரஸ்வதி, ஸ்ரீ வித்யாஷ்ரம், ரிஷிகேஷ்
- ஞானகலாரத்னம், 1987; வழங்கியவர்: செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர்
- நாதகனல், 1987; வழங்கியது: நாதகனல், சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 1990[1]
- சங்கீத சூடாமணி விருது, 1996 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- சுவர யோக சிரோன்மணி, 1997 ; வழங்கியது: யோக ஜிவன சட்சங்கா (பன்னாட்டு அமைப்பு)
- பத்ம பூஷன் விருது, 2003
- சங்கீத கலாநிதி விருது, 2003[2] ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- சங்கீத கலாசிகாமணி விருது, 2005 ; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
மேற்கோள்கள்
- "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- `Sangita Kalanidhi' conferred on T. V. Sankaranarayanan
உசாத்துணை
- On a joyous musical journey தி இந்து நாளிதழிலிருந்து
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.