தாடிபத்திரி
தாடிபத்திரி (Tadipatri or Tadpatri) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். [2] தாடிபத்திரி நகரம், கர்னூல் மாவட்டம் மற்றும் கடப்பா மாவட்டம் ஆகியவற்றின் எல்லையில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ளது.
தாடிபத்திரி | |
---|---|
நகரம் | |
தாடிபத்திரி நகராட்சி அலுவலக கட்டிடம் | |
அடைபெயர்(கள்): Tadpatri | |
![]() ![]() தாடிபத்திரி | |
ஆள்கூறுகள்: 14.92°N 78.02°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 7.46 |
ஏற்றம் | 229 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,08,171 |
• அடர்த்தி | 15 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 515411 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-AP |
வாகனப் பதிவு | AP - 25 |
இணையதளம் | tadipatri.cdma.ap.gov.in/en |
மாவட்டத் தலைமையிடமான அனந்தபூருக்கு வடகிழக்கே 56 கிமீ தொலவில் தாடிப்பத்திரி நகரம் அமைந்துள்ளது.[3] தாடிபத்திரி நகரத்தில் பெண்ணாற்றின் தென்கரையில், ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த தொன்மை வாய்ந்த சிந்தல வெங்கடரமணர் கோயில் புகழ்பெற்றது.
மக்கள்தொகையியல்
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தாடிபத்திரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,08,171 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 54,015 ஆகவும், பெண்கள் 54,156 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் 68,750 (71.39 %) ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 11,869 அகவுள்ளனர்.
தாடிபத்திரி நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 78,102 (72.20%) ஆகவும், இசுலாமியர் 28,757 (26.58%) ஆகவும், மற்றவர்கள் 1.22% ஆகவும் உள்ளனர். [4]
உள்ளாட்சி நிர்வாகம்
7.46 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முதல் நிலை நகராட்சியான தாடிபத்திரி நகராட்சி 1920ல் நிறுவப்பட்டது. இந்நகராட்சி 34 நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[5]
போக்குவரத்து
மூன்று நடைமேடைகள் கொண்ட தாடிபத்திரி தொடருந்து நிலையத்தில் நாள்தோறும் 43 தொடருந்துகள் நின்று செல்கிறது. [6] [7]
மேற்கோள்கள்
- "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Government of Andhra Pradesh. மூல முகவரியிலிருந்து 7 June 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 January 2016.
- "Anantapur District Mandals" (PDF) 378. Census of India. பார்த்த நாள் 6 June 2017.
- https://www.google.co.in/search?client=opera&q=distance+from+anantapur+to+tadipatri&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8
- [http://www.census2011.co.in/census/city/424-tadpatri.html Tadpatri City Census 2011 data
- "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Government of Andhra Pradesh. பார்த்த நாள் 23 June 2016.
- https://indiarailinfo.com/search/atp-anantapur-to-tu-tadipatri/139/0/840
- Tadipatri Railway Station