சிந்தல வெங்கடரமணர் கோயில்

சிந்தல வெங்கடரமணர் கோயில் அல்லது சிந்தலராயசுவாமி கோயில் (Chintalarayaswamy Temple or Sri Chintala Venkataramana Temple) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்திரி எனும் நகரத்தில் திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைணக் கோயில் ஆகும். [1] [2] தாடிப்பத்திரி நகரத்தில் பாயும் பென்னா ஆற்றின் கரையில் இக்கோயில் உள்ளது. [1] இக்கோயில் கருங்கல் சிற்பங்களால் புகழ்பெற்றது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை ஆந்திராவின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இக்கோயிலின் கருட மண்டபம், கருங்கல் சக்கரங்கள் கொண்ட தேர் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.

சிந்தல வெங்கடரமணர் கோயில்
சிந்தல வெங்கடரமணர் கோயில்

பெயர்க் காரணம்

இங்கு கோயிலின் மூலவரான வெங்கடேஸ்வரர் புளிய மரத்தில் கீழ் கோயில் கொண்டுள்ளதால், சிந்தல வெங்கடேஸ்வர் எனப்பெயர் பெற்றார். தெலுங்கு மொழியில் சிந்தா என்பதற்கு புளியமரம் எனப்பொருளாகும்.[2]

வரலாறு

இக்கோயில் 16-ஆம் நூற்றாண்டின் நடுவில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. [3] கிருஷ்ணதேவராயரின் அமைச்சர் இரண்டாம் பெம்மசானி திம்மைனயுடு என்பவர் இக்கோயிலை கட்டினார்.[4][5] இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.[3]

படக்காட்சிகள்


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.