தலைவா

தலைவா என்பது ஆகத்து 2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். ஏ. எல். விஜய் இயக்கத்தில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியராஜும், மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்து இருக்கிறார்.

தலைவா
இயக்கம்ஏ. எல். விஜய்
தயாரிப்புசந்திர பிரகாஷ் ஜெயின்
கதைஏ. எல். விஜய்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுநிரவ் ஷா
படத்தொகுப்புஅந்தோணி
கலையகம்ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்சு
வெளியீடுஆகத்து 9, 2013 (2013-08-09) (தமிழகம், புதுவை தவிர)
ஆகத்து 20, 2013 (2013-08-20) (தமிழகம், புதுவை)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு65கோடி
மொத்த வருவாய்45கோடி

நடிகர்கள்

கதை

படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதியின் கதைக்களம் ஆசுத்திரேலியா, பிற்பகுதி மும்பாயில் நடைபெறுகிறது. மும்பாயில் தமிழர்களின் தலைவனும், மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவுமாக இருப்பவர் "அண்ணா". தனது முடிவு தாயை இழந்த தனது விஸ்வாவைப் பாதிக்காது இருப்பதற்காகக் குழந்தையாக இருக்கும்போதே அவனை ஆசுத்திரேலியாவுக்கு அனுப்பிவிடுகிறார். பொலீசும், அண்ணாவின் எதிரிகளும் அவரைப் பிடிக்க முயன்றும் முடியாத நிலையில், வளர்ந்து இளைஞனாக இருந்த விஸ்வாவைத் தந்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவந்து அவனைப் பயன்படுத்தி "அண்ணா"வைப் பிடித்துக் கொன்றுவிடுகிறார்கள். பின்னர், தந்தையின் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ளும் விஸ்வா எதிரிகளை அழிப்பதுடன், தந்தையின் பாதையிலேயே செல்வதுதான் கதை.

பாடல்கள்

இப்படத்தின் இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்திருக்கிறார்.[1]

வெளியீடு

தலைவா திரைப்படத்தின் அமெரிக்க மற்றும் கனடா வெளியீடு உரிமையை பரத் கிரியேசன்ஸ் கைப்பற்றியது [2]. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளிநாடுகளில் தலைவா படத்தை வெளியிடுகிறது [3]. சன் டிவி ஒலிபரப்பு உரிமையை பெற்று உள்ளது [4]

வெளியீட்டில் சிக்கல்

இப்படம் உலகம் முழுவதும் ஆகத்து 9 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தமிழகத்திலும், புதுவையிலும் வெளியிடப்படாமல் மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.[5] சென்னையில் இத்திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை தகுந்த பாதுகாப்பு கிடைக்கும் வரை திரையிட மறுத்துவிட்டார்கள். அதனால் இப்படம் தமிழகத்தில் ஆகத்து 9 அன்று வெளியாகவில்லை.[6] தலைவா படம் தமிழகம், புதுவையில் 20ந் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது[7][8]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.