தரவு பொட்டல ஆழ் சோதனை

தரவு பொட்டல ஆழ் சோதனை (ஆங்கிலத்தில் Deep packet inspection; டி.பி.ஐ, தரவு பொட்டல முழு சோதனை மற்றும் தகவல் பிரிப்பு என்றும் வழங்கப்படும்) என்பது, கணினி பிணையங்களில் சோதனை முனைகளைக் கடக்கும் பொட்டலங்களின் தரவு பகுதிகளை (இயன்றபோது தலைப்பகுதியையும்) ஆய்ந்து, நெறிமுறை விலகிய பொட்டலங்கள், நச்சுநிரல்கள், எரித மின்னஞ்சல்கள், ஊடுருவல்கள் முதலியவற்றைத் தேடியோ, எவ்வகை பொட்டலங்கள் சோதனை முனையைக் கடக்கலாம் என்று வகுக்கப்பட்ட விதியின் அடிப்படையிலோ, வேறு இலக்கிற்கு பொட்டலத்தை திசைவிக்க வேண்டியோ, அல்லது புள்ளிவிவரங்களைச் சேகரிக்கவோ, அவற்றை வடிகட்டும் முறைகளுள் ஒன்று. ஐ.பி. பொட்டலங்கள் பல தலைப்பகுதிகளைக் கொண்டிருக்கும். பிணையக் கருவிகள் இயல்பான வெயல்பாட்டிற்கு இ.நெ.ப.4 தலைப்பகுதிகளின் முதல் தலைப்பகுதியை மட்டும் பயன்படுத்துவதே போதுமானது. அதன் இரண்டாம் தலைப்பகுதியைப் பயன்படுத்துவது மேலோட்டமான பொட்டல சோதனையாகக் கருதப்படுகிறது.[1].

மேற்கோள்கள்

  1. முனைவர் தாமஸ் போர்டர் (2005-01-11). "பொட்டல ஆழ் சோதனையின் ஆபத்துகள் (ஆங்கிலம்)". செக்யூரிடி ஃபோகஸ். பார்த்த நாள் 2015-04-30.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.