இந்தியாவில் இணைய சமத்துவம்
ஏப்ரல் 2015 வரையில் இந்தியாவில் இணைய சமத்துவத்தை நிர்வகிக்கும் சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை. இணைய சமத்துவம் என்பது இணையத்தில் பயனர்கள், அவர்கள் நாடும் பொருள், வலைதளம், பயன்படுத்தும் கருவிகள், இயக்கி, வலைபீடம் முதலியவற்றின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டாமல், வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்காமல் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற கொள்கை .[1] ஏற்கனவே இந்திய இணையச் சேவை வழங்கிகளால் இணைய சமத்துவக் கொள்கை மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இணைய சமத்துவம் |
---|
![]() |
தலைப்புகள், விவகாரங்கள் |
நாடு அல்லது பிராந்திய வாரியாக |
|
![]() |
ஓவர் தி டாப் (ஓ.டி.டி) சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு தொடர்பான கலந்தாய்வு அறிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களின் கருத்துக்காக 2015 மார்ச்சில் வெளியிட்டுள்ளது[2]. இவ்வறிக்கை ஒருதலைப் பட்சமாக விளங்குவதாகவும், குழப்பங்கள் நிரம்பியதாகவும் இருப்பதாகக் கடுமையாக விமரிசிக்கப்பட்டுள்ளது. இந்திய இணைய பயனர்களிடமிருந்தும், பல அரசியல் தலைவர்களிடமிருந்தும் இவ்வறிக்கைக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேற்கோள்கள்
- ச.ஸ்ரீராம். "செல்போன் நிறுவனங்கள் vs ஆப்ஸ்!! கட்டணத்தை அதிகரிக்குமா நெட் நியூட்ராலிட்டி பிரச்னை". நாணயம் விகடன். பார்த்த நாள் 28 ஏப்ரல் 2015.
- "ஓவர் தி டாப் (ஓ.டி.டி) சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு கலந்தாலோசனை அறிக்கை". ட்ராய் (27 மார்ச் 2015). பார்த்த நாள் 28 ஏப்ரல் 2015.