தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி என்பது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 பிரிவுகளில் ஒன்றாகும்.

வரலாறு

1974-ம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து 104 பேருந்துகள் பிரிக்கப்பட்டு நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய பணிமனைகள் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு நேசமணிப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. நேசமணிப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டபின் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது. 1997-ல் போக்குவரத்துக் கழகங்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என பெயர்மாற்றம்செய்யப்பட்டப்பொழுது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரையுடன் இணைக்கப்பட்டது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய போக்குவரத்துக் கழகங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி என 01.11.2010 அன்று உருவாக்கப்பட்டது

மண்டலம்

இந்த போக்குவரத்துக் கழகம் 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. திருநெல்வேலி
  2. நாகர்கோவில்
  3. தூத்துக்குடி

நெல்லை மண்டலம்

கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரால் பெரும்பான்மையினரால் அறியப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தை உள்ளடக்கியது. இம்மண்டலம் 10 பணிமனைகளை கொண்டது.

நாகர்கோவில் மண்டலம்

நேசமணி போக்குவரத்துக் கழகம் என்ற பெயரால் பெரும்பான்மையினரால் அறியப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய இக்கோட்டம் பெரும்பான்மையான நகர மற்றும் புறநகரப் பேருந்துகளை இயக்குகிறது. நாகர்கோவிலில் பேருந்திற்கு மேற்கூரை கட்டும் தளமும் உள்ளது. 12 பணிமனைகள் கொண்ட இக்கோட்டம் சுமார் 1000-க்கும் மேலான பேருந்துகளை தினமும் இயக்குகிறது.

தூத்துக்குடி மண்டலம்

இம்மண்டலம் 6 பணிமனைகளை கொண்டது.

ஆதாரங்கள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.