தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை என்பது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் எட்டு போக்குவரத்துக்கழங்களில் ஒன்றாகும்.

மதுரையில் ஓடிய பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தின் நகரப் பேருந்து ஒன்றில் வழங்கப்பட்ட 25 பைசா பயணச்சீட்டு. 1976க்கும் 1981க்கும் இடைப்பட்ட காலத்தியதாக இருக்கவேண்டும். வலதுபுறத்தில் அக்டோபர் 2015இல் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்.டின் நகரப் பேருந்து பயணச்சீட்டு. பெருமளவுக்கு மின்னணுக் கருவிகள் புழக்கத்துக்கு வந்துவிட்டாலும் இன்னும் இத்தகைய சீட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. துளையிடப்பட்ட நிறுத்துநிலையிலிருந்து எதிர் நிறுத்துநிலை வரை செல்லத்தக்கது, பயணம் முடிந்தவுடன் பெட்டியில் இடவும் போன்ற குறிப்புகள் இப்போது இல்லை. பயணியா, சுமையா என வேறுபடுத்திக் காட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.

வரலாறு

1972 ஆம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்போக்குவரத்துக்கழகத்திலிருந்து 1974-ம் ஆண்டு 104 பேருந்துகள் பிரிக்கப்பட்டு கட்டப்பொம்மன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு இதிலிருந்து 62 பேருந்துகள் பிரிக்கப்பட்டு சோழன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. மேலும் 1986-ம் ஆண்டு 446 பேருந்துகள் பிரிக்கப்பட்டு இராணி மங்கம்மாள் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.

ஆதாரங்கள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை அலுவல் இணையதளம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.