டெட்ராகோசேன்
டெட்ராகோசேன் (Tetracosane) என்பது C24H50 அல்லது H(CH2)24H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டெட்ராக்கோசேன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்ற மெழுகுதன்மையான படிகங்களாகக் காணப்படுகிறது. டெட்ராகோசேனுக்கு 14,490,245 கட்டமைப்பு மாற்றியங்கள் உள்ளன [2]. மேலும், 252,260,276 முப்பரிமான மாற்றியங்களும் டெட்ராகோசேனுக்கு உண்டு [3]. பிற ஐதரோ கார்பன்களைப் போலவே இதனுடைய பெயரும் கிரேக்க சொல்லில் இருந்து வருவிக்கப்பட்டது ஆகும். இச்சேர்மத்தின் மூலக்கூறில் 24 கார்பன் அணுக்கள் உள்ளன என்பதே பெயரிடலுக்கு அடிப்படையாக அமைகிறது.
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராகோசேன்[1] | |
இனங்காட்டிகள் | |
646-31-1 ![]() | |
Beilstein Reference |
1758462 |
ChEBI | CHEBI:32936 ![]() |
ChemSpider | 12072 ![]() |
EC number | 211-474-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12592 |
SMILES
| |
பண்புகள் | |
C24H50 | |
வாய்ப்பாட்டு எடை | 338.66 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற மெழுகுத் தன்மையுள்ள படிகங்கள் |
உருகுநிலை | |
கொதிநிலை | 391.4 °C; 736.4 °F; 664.5 K |
கரையாது | |
கரைதிறன் | ஈதர், தொலுயீன், பென்சீனில் நன்கு கரையும். ஆல்ககாலில் கரையும். |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Orthorhombic |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S |
651.0 யூல் கெல்வின்−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 730.9 யூல் கெல்வின்−1 mol−1 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | > 113 °C (235 °F; 386 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
என்-டெட்ராகோசேன் எனப்படும் கிளைச்சங்கிலியற்ற நேர்டெட்ராகோசேன் ஈவங்கைட்டு என்ற கனிமத்தில் கிடைக்கிறது. செக் குடியரைச் சேர்ந்த கிழக்கு மொராவியாவின் கொன்மாவுக்கு அருகில் பக்நிக் கற்சுரங்கத்திலும், சைபீரியாவின் தங்குசுகா நதியின் தாழ்வான ஈவங்கைட்டு பிரதேசத்திலும் இக்கனிமம் கிடைக்கிறது. நிறமற்ற செதில்களாகக் காணப்படும் இது ஒளிரும் மஞ்சள்-ஆரஞ்சு நிறமுடையதாகவும் கிடைக்கிறது.

மேற்கோள்கள்
- "tetracosane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (16 September 2004). பார்த்த நாள் 2 January 2012.
- "A000602 - OEIS". பார்த்த நாள் 30 August 2013.
- "A000628 - OEIS". பார்த்த நாள் 30 August 2013.