டி. எஸ். சேனநாயக்கா

டி. எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake, சிங்களம்: දොන් ස්ටීවන් සේනානායක, அக்டோபர் 20, 1884 - மார்ச் 22, 1952) இலங்கையின் முதலாவது பிரதமரும், அரசியல்வாதியும் ஆவார். பௌத்தரான இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர்த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

டி. எஸ். சேனநாயக்கா
D. S. Senanayake
டி. எஸ். சேனாநாயக்கா
1வது இலங்கைப் பிரதமர்
பதவியில்
அக்டோபர் 14, 1947[1]  மார்ச் 22, 1952[1]
அரசர் ஆறாம் ஜோர்ஜ்
இரண்டாம் எலிசபெத்
பின்வந்தவர் டட்லி சேனநாயக்கா
மீரிகமை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1952
இலங்கை அரசாங்க சபையின் மினுவாங்கொடை தொகுதி உறுப்பினர்
பதவியில்
1931–1947
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் நீர்கொழும்பு தொகுதி உறுப்பினர்
பதவியில்
1924–1931
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 20, 1884(1884-10-20)
போத்தல, நீர்கொழும்பு, பிரித்தானிய இலங்கை
இறப்பு மார்ச்சு 22, 1952(1952-03-22) (அகவை 67)
கொழும்பு, இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மோலி டுனுவில[2]
சமயம் முதலில் பௌத்தம் பின்னர் ரோமன் கத்தோலிக்கம் பின்னர் மீண்டும் பௌத்தம்

1929 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஓர் உறுப்பினரானார். 1931 அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேர் பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். கல்லோயா திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். 1952 இல் குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் டட்லி சேனாநாயக்க இலங்கையின் பிரதமரானார்.

மேற்கோள்கள்

  1. Parliament of Sri Lanka - Handbook of Parliament, Prime Ministers
  2. Sri Lankan Sinhalese Family Genealogy, The Don Bartholomews Senanayake Family Tree
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.