ஜேம்சு பால்க்னர்
ஜேம்சு பீட்டர் பால்க்னர் (James Peter Faulkner, பிறப்பு: 29 ஏப்ரல் 1990[1]) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். தாசுமானிய மாநில அணிக்காக விளையாடி வருகிறார். பல்துறை வீரரான இவர் இடக்கை விரைவு-மிதப் பந்துவீச்சாளரும், வலது கை மட்டையாளர் ஆவார். பால்க்னர் தனது முதலாவது பன்னாட்டு இருபது20 போட்டியை 2012 பெப்ரவரி 1 இல் ஆத்திரேலிய அணிக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடினார்.[2]
ஜேம்சு பால்க்னர் James Faulkner | |||||||||
![]() |
![]() | ||||||||
இவரைப் பற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜேம்சு பீட்டர் பால்க்னர் | ||||||||
பட்டப்பெயர் | தெ ஃபினிஷர் | ||||||||
வகை | பல்-துறை | ||||||||
துடுப்பாட்ட நடை | வலக்கை | ||||||||
பந்துவீச்சு நடை | இடக்கை விரைவு-மிதம் | ||||||||
அனைத்துலகத் தரவுகள் | |||||||||
முதற்தேர்வு (cap 435) | 21 ஆகத்து, 2013: எ இங்கிலாந்து | ||||||||
முதல் ஒருநாள் போட்டி (cap 202) | 1 பெப்ரவரி, 2013: எ மேற்கிந்தியத் தீவுகள் | ||||||||
கடைசி ஒருநாள் போட்டி | 18 சனவரி, 2015: எ இந்தியா | ||||||||
சட்டை இல. | 44 | ||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||
2008– | தாசுமேனியா | ||||||||
2011 | புனே வாரியர்சு | ||||||||
2011– | மெல்பேர்ண் ஸ்டார்சு | ||||||||
2012 | கிங்சு இலெவன் பஞ்சாபு | ||||||||
2013– | ராஜஸ்தான் ராயல்ஸ் | ||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||
தே | ஒநா | முத | பஅ | ||||||
ஆட்டங்கள் | 1 | 38 | 45 | 71 | |||||
ஓட்டங்கள் | 45 | 770 | 1,787 | 1,348 | |||||
துடுப்பாட்ட சராசரி | 22.50 | 48.12 | 31.91 | 38.51 | |||||
100கள்/50கள் | 0/0 | 1/4 | 0/12 | 1/9 | |||||
அதிக ஓட்டங்கள் | 23 | 116 | 94 | 116 | |||||
பந்து வீச்சுகள் | 166 | 1,721 | 7,139 | 3,383 | |||||
இலக்குகள் | 6 | 50 | 147 | 97 | |||||
பந்துவீச்சு சராசரி | 16.33 | 32.36 | 24.06 | 31.75 | |||||
சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 4 | 0 | |||||
ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | n/a | 0 | n/a | |||||
சிறந்த பந்துவீச்சு | 4/51 | 4/48 | 5/5 | 4/20 | |||||
பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 11/– | 22/– | 20/– | |||||
பெப்ரவரி 2, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ |
இவர் 2011 இல் இந்தியன் பிரீமியர் லீக்கின் புனே வாரியர்சு இந்தியா அணியிலும், 2012 இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணியிலும் விளையாடினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 400,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. .[3]
இந்தியன் பிரீமியர் லீக்
2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் புனே வாரியர்சு இந்தியா அணிக்காக விளையாடிய இவர் 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார்.இந்தத் தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 72 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சிறந்த பந்துவீச்சு 2/41 ஆகும். இவரின் சராசரி இந்தத் தொடரில் 24. 00 ஆக இருந்தது. 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை 400,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்[4]. இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 427 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 28 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சிறந்த பந்துவீச்சு 5/16ஆகும். இவரின் சராசரி இந்தத் தொடரில்15.25 ஆக இருந்தது[5]. 2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் 26 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியிலும் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[4][6] இந்தத் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 426 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சிறந்த பந்துவீச்சு 3/26 ஆகும். இவரின் சராசரி இந்தத் தொடரில் 53.25 ஆக இருந்தது.[5]
சர்வதேச போட்டிகள்
பெப்ரவரி 1, 2012 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[7] துவக்கத்தில் இடது கை சுழற்பந்துவீச்சாளராக அறிமுகமானார். தற்போது யார்க்கர் அளவில் கூக்ளி பந்துவீசுவதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[8][9] 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பிடித்தார். அந்தத் தொடரின் ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[10] 2013 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் தொடரில் விளையாடிய அனைத்து தொடரிலும் இவருக்கு நிலையான இடம் கிடைத்தது. இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 29 பந்துகளில் 64 ஓட்டங்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் இஷாந்த் ஷர்மா வீசிய ஒரு ஓவரில் 30 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிகு உதவினார்.[11] நவம்பர் 2, 2013 பெங்களூருவில் நடைபெற்ற இதே அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் போட்டி நூறினைப் பதிவு செய்தார். இவர் 57 பந்துகளில் 116 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் விரைவாக நூறு ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது ஆத்திரேலிய வீரர் எனும் சாதனை படைத்தார். இதில் 4 ஆறுகளும், 11 நான்குகளும் அடங்கும்.இதற்கு முன்னதாக மார்ச் 8, 2013 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக கிளென் மாக்சுவெல் 51 பந்துகளில் 102 ஓட்டங்கள் எடுத்ததே முதல் இடத்தில் உள்ளது.[12][13] 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் பொட்டியில் 36 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
மேற்கோள்கள்
- "James Faulkner". Espncricinfo.com. பார்த்த நாள் 2013-08-09.
- "Australia v India scorecard". ESPNcricinfo. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2012.
- Vijay Lokapally (2013-03-30). "Rajasthan Royals believes in collective performance". தி இந்து. பார்த்த நாள் 2013-08-21.
- "James Faulkner (cricketer)", Wikipedia (in ஆங்கிலம்), 2018-05-10, retrieved 2018-05-19
- "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), retrieved 2018-05-19
- Vijay Lokapally (2013-03-30). "Rajasthan Royals believes in collective performance". The Hindu. பார்த்த நாள் 2013-08-21.
- "Australia v India scorecard". ESPNcricinfo. பார்த்த நாள் 1 February 2012.
- Faulkner, Maxwell turn into each other
- James Faulkner, the Best Slower in modern day cricket
- "The Ashes 2013 : Chris Rogers and James Faulkner in Ashes squad". ESPN Cricinfo. பார்த்த நாள் 2013-08-09.
- Australia steal win with Faulkner blitz
- "India edge sixathon with Rohit Sharma's 209", Cricinfo (in ஆங்கிலம்), retrieved 2018-05-19
- "Records | One-Day Internationals | Batting records | Fastest hundreds | ESPNcricinfo", Cricinfo, retrieved 2018-05-19