சேப்பாத்

சேப்பாத் (Safed, எபிரேயம்: צְפַת Tzfat, விவிலிய எபிரேயம்: Ṣ'fath; அரபு மொழி: صفد, Ṣafad) இசுரேலின் வட மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரு நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர்கள் (2,953 ft) உயரத்தில் அமைந்துள்ள இது, இசுரேலிலும் கலிலேயாவிலும் உயரமான நகராகும்.[2] இதனுடைய உயரத்தினால், சேப்பாத் சூடான கோடையும், குளிரையும் பெறுவதோடு பனிப் பொழிவையும் குளிர்காலத்தையும் அடிக்கடிப்பெறுகிறது.[3] 16 ஆம் நூற்றாண்டு முதல், சேப்பாத் யூதத்தின் நான்கு புனித நகர்களில் ஒன்றாக, எருசலேம், எபிரோன், திபேரியு என்பவற்றுடன் சேர்த்துக் கருதப்படுகிறது.[4] அக்கால முதல் யூத உள்ளுணர்வியல் எனப்படும் கபலாவின் மையமாக விளங்குகிறது.

சேப்பாத்
  • צְפַת
  • صفد
எபிரேயம் transcription(s)
  ISO 259Çpat
  Translit.Tz'fat
  Also spelledTsfat, Tzefat, Zfat, Ẕefat (official)

Logo
மாவட்டம்வட மாவட்டம்
உருவாக்கம்கானான் காலம்
அரசு
  வகைநகர்
  மேயர்இலான் சோகத்
ஏற்றம்900
மக்கள்தொகை (2010)[1]
  மொத்தம்30,100

உசாத்துணை

  1. "Table 3 - Population of Localities Numbering Above 2,000 Residents and Other Rural Population". Israel Central Bureau of Statistics (2010-06-30). பார்த்த நாள் 2010-10-30.
  2. "Safed". Jewish Virtual Library Article. பார்த்த நாள் 2012-01-07.
  3. Zev Vilnay (1972). "Tsefat". A Guide to Israel. எருசலேம், Palestine: HaMakor Press. பக். 522–532.
  4. "Tiberias". Jewish Encyclopedia. பார்த்த நாள் 2012-01-07.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.